இலங்கை இறுதி போரின் போது அவர் ராணுவத்திடம் சரணடைந்தார். ஆனால் அவரை இலங்கை ராணுவத்தினர் கொலை செய்து பிணத்தை தெருவில் வீசினார்கள். அவர் சரண் அடைந்த பிறகு ராணுவத்தினர் அவரிடம் விசாரிக்கும் புகைப்படங்கள், காணொளிகள் ஏற்கனவே வெளியாகி இருந்தன.
அவரிடம் விசாரணையை முடித்து விட்டு பின்னர் சித்ரவதை செய்து கொன்றுள்ளனர். இப்போது ரமேசை கொல்வதற்கு முன்பு அவரிடம் விசாரணை நடத்திய இன்னொரு காட்சி வெளியாகி உள்ளது. அதில் ரமேஷ் ராணுவத்தினரின் பிடியில் இருக்கும் போது சாதாரண உடையில் இருக்கிறார். பின்னர் அவரை கட்டாயப்படுத்தி ராணுவ உடையை அணிய வைக்கின்றனர். அடுத்து தரையில் உட்கார வைத்து சிங்கள வீரர்கள் சுற்றி நின்று அவரிடம் விசாரிக்கிறார்கள்.
அதிகாரி ஒருவர் ஆங்கிலத்தில் ரமேஷிடம் கேள்வி கேட்கிறார். அதற்கு அவர் பதில் அளிக்கிறார். ரமேஷ் பிறந்த தேதி, பிறந்த ஊர், விடுதலை புலிகள் இயக்கத்தில் சேர்ந்த நாள், அவருடைய மனைவி, குழந்தைகள், பிரபாகரனுடைய மனைவி ஆகியோரை பற்றி ரமேஷிடம் விசாரிக்கிறார்.
கடைசியில் ரமேசுடன் ராணுவ அதிகாரி கடும் கோபத்தில் ஏதோ பேசுகிறார். அதன் பிறகு காட்சி நின்றுவிடுகிறது. எனவே அந்த விசாரணை முடிந்ததும் அவரை சித்ரவதை செய்து கொன்றிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
அவரது பிணம் ஒரு குடிசை எதிரே கிடந்தது. அவருடைய முகம் கோரமாக சிதைக்கப்பட்டிருந்தது. எனவே இந்த காட்சிகள் மூலம் சிங்கள ராணுவத்திடம் சரணடைந்த பலரும் இதேபோல கோரமாக கொல்லப்பட்டது உறுதியாகி இருக்கிறது.
No comments:
Post a Comment