Translate

Thursday, 22 March 2012

பாவக்கறையை போக்க வேண்டியது இந்தியாவுக்கு அவசியமானது என்கிறார் விக்கிரமபாகு


இலங்கைக்கு எதரிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது தடுப்பதற்கான நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டு வருவதாக இடது சாரி முன்னணியின் தலைவரும் மாநகர சபை உறுப்பினருமான கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன தெரிவித்துள்ளார்.


இந்தியாவின் தேவைக்காகவே பிரபாகரனுக்கு எதிராகவும் தமிழ் மக்களுக்கு எதிராகவும் யுத்தம் மேற் கொள்ளப்பட்டது. எனவே இந்த பாவக்கறையை இந்தியா கழுவ வேண்டிய அவசியம் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இது தொடர்பாக கலாநிதி விக்கிரமபாகு கருணராத்ன மேலும் தெரிவிக்கையில், 

தமிழ் மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டிய கடப்பாடு இந்தியாவுக்குண்டு. ஏனெனில் இந்தியாவின் தேவைக்கு இனங்கவே தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் மேற்கொள்ளப்பட்டது. 

எனவே, அந்தப் பாவக்கறையை போக்கும் தேவை இந்தியாவிற்கு உள்ளது. ஜெனீவா மனித உரிமை ஆணைக்குழுவில் இலங்கைக்கு எதிரான அமெரிக்காவின் பிரேரணையை வாக்கெடுப்பிற்கு விடாது மகிந்த ராஜபக்ஷவை பாதுகாக்கவும் . அதேவேளை, நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதை பொறுப்பேற்கவும் இந்தியா காய் நகர்த்தல்களை மேற்கொள்கிறது. 

ஏற்கனவே, இலங்கை அரசாங்கம் பல உறுதி மொழிகளை வழங்கி ஏமாற்றியதால் இம்முறை இந்தியா கடும் போக்கினை கடைப்பிடிக்கவுள்ளது என்றார்.

No comments:

Post a Comment