Translate

Thursday 22 March 2012

15 நாடுகள் எங்களுக்கு ஆதரவு! பெருமிதம் கொள்ளுகிறார் பீரிஸ்!!

15 நாடுகள் எங்களுக்கு ஆதரவு! பெருமிதம் கொள்ளுகிறார் பீரிஸ்!!

அமெரிக்காவால் ஐ.நா. மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட தீர்மானம் 9 வாக்குகளால் வெற்றியடைந்துள்ளது.

இலங்கைக்கு ஆதரவாக 15 வாக்குகளும் எதிராக 24 வாக்குகளும் பெறப்பட்டுள்ள நிலையில் தமக்கு 15 நாடுகள் ஆதரவாக வாக்களித்தமை திருப்தியளிப்பதாக வெளிவிவகார அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.


இந்நாடுகள் மீது, பல்வேறு வகையில் செலுத்தப்பட்ட கடும் அழுத்தங்களுக்கு மத்தியிலும் 15 நாடுகள் இலங்கைக்காக வாக்களித்தமை எமக்கு பெரும் திருப்தியளிக்கிறது.

அந்நாடுகளுக்கு எமது நன்றியையும் ஆழ்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கின்றோம் என வெளிவிவகார அமைச்சர் பீரிஸ் அறிக்கையொன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், வாக்களிப்பில் கலந்துகொள்ளாததன் மூலம் தீர்மானத்திற்கு ஆதரவளிக்க மறுத்த 8 நாடுகளுக்கும் நாம் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கெதிரான பிரேரணையை 15 நாடுகள் எதிர்த்தமை மற்றும் 8 நாடுகள் வாக்களிப்பில் பங்குபற்றாத நிலையில், 47 அங்கத்தவர்களைக் கொண்ட மனித உரிமைகள் பேரவையில் இறுதி முடிவானது, 23 நாடுகள் தீர்மானத்தை ஆதரிக்கவில்லை. 24 நாடுகள் அதை ஆதரித்தன. இவற்றுக்கிடையிலான வித்தியாசம் குறைவானதாகும்.

இந்த அனுபவத்தில் மிக கவலையளிக்கும் விடயம் என்னவென்றால், தீர்மானம் தொடர்பான நாட்டின் சிறந்த நலன்களுடன் சம்பந்தமில்லாத தந்திரோபாய கூட்டணிகள் மற்றும் ஏனைய நாடுகளின் உள்ளூர் அரசியல் விவகாரங்களின் அடிப்படையில் இவ்வாக்களிப்பு இடம்பெற்றுள்ளது. இது மனித உரிமைகள் பேரவை ஸ்தாபிக்கப்பட்டதன் நோக்கங்களுக்கு முரணானது என அமைச்சர் பீர்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment