வைகோ, சீமான், திருமாவளவன், கொளத்தூர் மணி ஆகியோரை கைது செய்ய காவல்துறை முயற்ச்சி..?
திருநெல்வேலி: போலீஸ் அனுமதியின்றி நாளை (மார்ச் 23) நெல்லையில் நடத்தப்படும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்கும் வைகோ, திருமாவளவன், சீமான் உள்ளிட்டோர் கைதாகின்றனர்
. கூடங்குளத்தில் அணுஉலைக்கு எதிராக போராடிவரும் இடிந்தகரை மக்களுக்கு ஆதரவாக “அணுஉலை எதிர்ப்புமக்கள் கூட்டமைப்பினர்’ நாளை நெல்லை, பாளையங்கோட்டை ஜவஹர் திடலில் காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதில் ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ, சீமான், திருமாவளவன், கொளத்தூர் மணி, தியாகு உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். ஆர்ப்பாட்டத்திற்கு பிறகு அனைவரும் கூடங்குளத்திற்கு செல்ல திட்டமிட்டுள்ளனர். ஆனால் ஆர்ப்பாட்டத்திற்கோ, ஊர்வலத்திற்கோ போலீஸ் அனுமதி தராததால் அவர்கள் கைது செய்யப்படலாம் என உணர்வாளர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment