அமெரிக்காவை மிரட்டும் மகிந்த சமரசிங்க
கண்ணாடி வீடுகளில் வசிப்போர் மற்றவர் மீது கல்லெறியும் போது, மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என இலங்கை சார்பில் ஜெனிவா மனித உரிமை பேரவையில் கலந்துக் கொண்டுள்ள அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மனித உரிமை பேரவையில், இலங்கை சம்பந்தமாக அமெரிக்கா கொண்டு வந்த யோசனைக்கு பதிலளித்து உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இலங்கை இந்த யோசனையை ஏற்றுக்கொள்ளாது எனவும் இது மனித உரிமை பேரவையின் கொள்கைகளுக்கு முரணானது எனவும் அமைச்சர் கூறியுள்ளார்.
மருத்துவர்கள் முதலில் தம்மை குணப்படுத்தி கொள்ள வேண்டும் என கூறி, அமைச்சர் தனது உரையை நிறைவு செய்தார். இதன் பின்னர் இலங்கைக்கு எதிரான யோசனை தொடர்பில் வாக்கெடுப்பு நடத்தப்பட்டதுடன், 9 மேலதிக வாக்குகளினால் யோசனை நிறைவேற்றப்பட்டது. இந்தியா உட்பட 24 நாடுகள் யோசனைக்கு ஆதரவாக வாக்களித்தன. இலங்கைக்கு ஆதரவாக 15 நாடுகள் மாத்திரமே வாக்களித்தன. 8 நாடுகள் வாக்கெடுப்பில் கலந்துக்கொள்ளவில்
No comments:
Post a Comment