Translate

Thursday, 22 March 2012

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்கும் ஆண்கள்: அதிர்ச்சி ரிப்போர்ட்!

அழகு என்பது அவசியமானதுதான். அதேசமயம் ஆண், பெண் இருவருமே அழகுக்கு ஆசைப்பட்டு உபயோகிக்கும் பொருட்கள் ஆரோக்கியத்திற்கு வேட்டு வைக்கும் ஆபத்து உள்ளது என்று மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.
தலைமுடி வளர்ச்சிக்கு பயன்படுத்தப்படும் ஒரு மருந்து ஆண்களின் தலைமுறையையே அஸ்தமிக்கச் செய்யும் தன்மை கொண்டுள்ளது என்று அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது.
பக்க விளைவு மருந்துகள்

தலைமுடி குறித்த கவலை பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் அதிகம் இருக்கிறது. கவலை, மன அழுத்தம், ரசாயன கலவைகொண்ட ஷாம்பு, சோப்பு பயன்படுத்துவது, மாசடைந்த சுற்றுச் சூழல் போன்றவைகளினால் இன்றைக்கு பெரும்பாலான இளைஞர்களின் தலைமுடி உதிர்ந்து வழுக்கைத் தலையாக மாறிவருகிறது.
வழுக்கையாக இருந்தால் திருமணம் நடப்பதில் சிக்கல் ஏற்படுமோ? பெண்ணுக்கு பிடிக்காவிட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்திலேயே அநேகம்பேர் தவிக்கின்றனர்.
முடி உதிராமல் தடுக்கவும், தலைமுடி நன்றாக வளரவும் ரசாயனக் கலவைகள் அடங்கிய எண்ணெய்களையோ, கிரீம்களையே வாங்கி உபயோகிக்கின்றனர்.
ஒரு சிலர் மாத்திரைகளையும் உட்கொள்கின்றனர். அழகை அதிகரிக்க அவர்கள் உபயோகிக்கும் அந்த மருந்துகளில் தான் ஆபத்து ஒளிந்திருக்கிறது என்பது அநேகம் பேருக்கு தெரிவதில்லை.
அமெரிக்காவிலும், பிரான்ஸ் நாட்டிலும் தலைமுடி வளர்ச்சிக்காக உபயோகப்படுத்தப்பட்ட புரோபேஷியா என்ற மருந்து ஆண்களுக்கு மலட்டுத்தன்மையை ஏற்படுத்தியது கண்டறியப்பட்டது.
ஹார்மோன் பாதிப்பு
பிரான்ஸ் நாட்டில் மட்டும் 2010ம் ஆண்டு 32,000 ஆண்கள் இந்த மருந்தை பயன்படுத்தியுள்ளனர். அவர்கள் இந்த மருந்தின் பயன்பாட்டை நிறுத்தி பல மாதங்களுக்குப்பின்னர் அவர்களை சோதனை செய்தபோது அந்த ஆண்களுக்கு ஆண்மைகுறைபாடு இருந்தது கண்டறியப்பட்டது.
இதற்கு காரணம் புரோபேஷியாவில் உள்ள பினஸ்டிரைடு (Finasteride) என்ற பொருள் டெஸ்ட்ரோஜன் என்ற ஆண்மைச் சுரப்பினைத் தடுப்பதுதான் என்று புரோபேஷியா மருந்தைத் தயாரிக்கும் மெர்க் என்பவர் கூறியுள்ளார்.
ஆண்களுக்கு ஆபத்து
புரோபேஷியா மருந்தினை உபயோகிப்பதன் மூலம் எழுச்சி நிலை குறைதல், தாம்பத்ய உறவின் போது உற்சாகம் இழத்தல், இயலாமை உள்ளிட்ட குறைபாடுகள் ஏற்படுவதும் கண்டறியப்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த மருந்தினை உபயோகிக்கவும், விற்பனை செய்யவும் அமெரிக்கா, ப்ரான்ஸ் நாடுகளில் தடை விதிக்கப்பட்டுள்ளன.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள பிரான்ஸ் நாட்டின் சுகாதார உற்பத்தி பாதுகாப்பு அமைப்பின் தலைவரான டொமினிக் மாரஞ்சி கூறியதாவது, புரோபேஷியா மருந்தின் அளவைக் குறைத்துப் பயன்படுத்தலாம், அவ்வாறு நீண்ட நாட்கள் பயன்படுத்தினால் 3 சதவீதம் தான் இழப்பு ஏற்படும் என்று கூறியுள்ளார்.
நம் ஊரிலும் தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கவும், முடி உதிராமல் தடுக்கவும் இந்த எண்ணெயை பூசுங்கள், இந்த மாத்திரையை சாப்பிடுங்கள் என தினசரி விளம்பரங்கள் வந்த வண்ணம் உள்ளது.
எனவே எந்த மருந்தில் என்ன பக்கவிளைவு உள்ளது என்பதை அறிந்து பயன்படுத்த வேண்டும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் அழகுக்கு ஆசைப்பட்டு ஆண்மையை இழக்க நேரிடும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

No comments:

Post a Comment