ஜெனீவாவின் பிரேரணையை ஏற்றுக்கொள்ள முடியாது : இலங்கை தூதுக் குழு தலைவர் சமரசிங்க _
ஜெனீவாவில் இலங்கைக்கு எதிராக அமெரிக்காவினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரணை ஏற்றுக்கொள்ள முடியாதெனவும், கடந்த 2009 ஆம் ஆண்டில் நிறைவேற்றப்பட்டிருந்த தீர்மானத்தை அது பலவீனப்படுத்தியுள்ளதாகவும் ஜெனீவாவில் நடைபெற்ற மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் இலங்கையின் விசேட பிரதிநிதி மஹிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில், இவ்வாறானதொரு தீர்மானத்தை கொண்டுவருவதிலும் பார்க்க போதிய கால அவகாசம் வழங்கியிருக்கலாம் எனவும், கண்ணடி மாளிகையில் இருப்போல் கல்லெறியக் கூடாதெனவும் உறுப்பு நாடுகள் சூழ்நிலையை உணர்ந்து செயற்பட வேண்டும்.
அத்துடன் அனுசரணையாளர்களுக்கும் இணை அனுசரணையாளர்களுக்கும் நான் ஒன்றை மட்டும் கூறவேண்டியுள்ளது. அதாவது முதலில் உங்களைத் திருத்திக்கொள்ளுங்கள் என்றார்.
|
No comments:
Post a Comment