அமெரிக்காவின் ஜெனீவா தீர்மானத்திற்கு இந்தியாவை வாக்களிக்க வைத்தமைக்கு தமிழக அரசில் கட்சிகளும் அதன் தலைவர்களும், மக்களுமே காரணம். அதற்காக அவர்களுக்கு பாராட்டுக்களையும், நன்றிகளையும், தெரிவிப்பதாக தமிழ் தேசிய கூட்டமைப்பபு மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஜெயானந்தமூர்த்தி விடுத்த அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பாக விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட் டுள்ளதாவது,

சிறீலங்கா அரசினால் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழர்கள் இனப் படுகொலை செய்யப்படும் போது, இந்திய மத்திய அரசு சிங்கள பேரினவாத சக்திக்கே தனது ஆதரவை வழங்கியது.

அன்றைய நிலையில், தமிழகத்தில் ஈழத்தமிழர்கள் மீது பற்றுக் கொண்ட அரசியல் கட்சிகளும், மக்களும்  பல்வேறு எதிர்ப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், அவற்றையெல்லாம் மத்திய அரசு கவனத்தில் கொள்ளாமையினால் தமிழ் இனப் படுகொலையை தடுக்க முடியவில்லை. இது என்றுமே இந்திய மீது தீராத வடுவாகவே இருக்கும்.

ஆனால், இன்றைய நிலையில் அமெரிக்கா, சிறீலங்காவுக்கு எதிராக மனித உரிமைகள் சபையில் சமர்ப்பித்த பிரேரணைக்கு இந்தியா ஆதரவளிக்க வேண்டும் எனக் கோரி, ஈழத்தமிழர்கள் சார்பாக தமிழக மக்களினதும் மற்றும் அரசியல் தலைவர்களினதும் ஒன்றிணைந்த அழுத்தங்களினால் தான் வெற்றியளித்தது.

தமிழகத்திலுள்ள அரசியல் கட்சிகள் வெற்வேறு நிலைப்பாடுகளைக் கொண்டிருந்தாலும், இந்த விடயத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் எவ்விதப் பேதங்களுமின்றி மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுத்திருந்தன.

இந்த ஒற்றுமையைக் கண்டு வியங்கின்றோம். இந்த ஒன்றுமையே எமது பலம். “தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்” என்று கூறுவதற்கு அமைய எந்தக் கட்சியாக இருந்தாலும், தமிழிர்கள் என்ற ஒரே காரணத்தினாலேயே, அனைத்துக் கட்சிகளும் ஒரே நிலைப்பாட்டை எடுத்திருந்தன.

இதைவிட, வக்கீல்கள் அமைப்புக்கள், எழிச்சி அமைப்புக்கள், விடுதலை இயங்கங்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள், மாணவ அமைப்புக்கள், வர்த்தக சங்கங்கள்,  கடற்றொழிலாளர்கள் சங்களங்கள் என அனைவரும் ஒன்றிணைந்து குரல் கொடுத்தமையினால் மத்திய அரசு தனது முடிவில் மாற்றத்தை ஏற்படுத்தியது. இது வரலாற்றில் முக்கிய திருப்பத்தை ஏற்படுத்தியள்ளது.

இவ்வாறு தொடர்ந்து ஈழத்தமிழர்களின் போராட்டத்திற்கு ஒன்றிணைந்து கரம் கோர்த்து குரல் கொடுப்பதன் மூலம் எதிர்காலத்தில ஈழத்தமிழர்களின் இலட்சியமான தமிழீழத்தை  அடைய முடியும். என்ற அசையாத நம்பிக்கை எமக்குண்டு.

எனவே, எதிர்காலத்திலும் ஒன்றிணைந்து இவ்வாறான போராட்டங்களை நடாத்த வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இவ்வாறான, நடவடிக்கையில் ஈடுபட்ட தமிழக மக்கள் மற்றும் அரசியல் கட்சிகள் அதன் தலைவர்கள்  அனைவருக்கும், தமிழீழ மக்கள் சார்பாகவும், புலம்பெயர் தமிழ் மக்கள் சார்பாகவும் பாராட்டுக்களையும், நன்றியை, தெரிவித்துக் கொள்கின்றேன் என அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்.ஜெயானந்தமூர்த்தி