Translate

Friday, 6 April 2012

இளம்பெண் விவகாரத்தில் ராமஜெயம் கடத்திப் படுகொலை: பொலிஸார் தகவல்


திமுக முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம், கடந்த 29ம் திகதி மர்மக்கும்பல் ஒன்றினால் கடத்தி படுகொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்த விசாரணையை தமிழ்நாடு பொலிஸார் 7 தனிப்படைகளை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
விசாரணையில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான தகவல்கள் வெளிவந்து கொண்டேயிருக்கின்றன. ராமஜெயம், 29ம் திகதிக்கு முன்தினமே கடத்தப்பட்டதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
அந்த விடயத்தை தற்போது பொலிஸார் மறுத்ததோடு 29ம் திகதி தான் கடத்தப்பட்டார் என்று உறுதிபட தெரிவித்துள்ளனர்.
ஏனென்றால் 29ம் திகதி காலை, பால் காரர் ஒருவரும், ஓய்வுபெற்ற நீதிபதி ஒருவரும் ராமஜெயத்தை சம்பவம் நடந்த அன்று பார்த்ததாக வாக்குமூலம் அளித்துள்ளனர்.
பெண் விவகாரம்: இதற்கு முன்பு ராமஜெயம் அண்ணன் நேருவின் எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் அல்லது ரியல் எஸ்டேட் எதிரிகளால் கொல்லப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் தெரிவித்திருந்தனர்.
தற்போது ஒரு பெண் விடயத்தில் ராமஜெயம் சிக்கியுள்ளார் என்று தெரிய வந்துள்ளது.
கடந்த திமுக ஆட்சியின் போது தூத்துக்குடியைச் சேர்ந்த வாலிபர் ஒருவரும் திருச்சியை சேர்ந்த பெண் ஒருவரும் காதலித்து திருமணம் செய்தனர். ஜாதி மீறி திருமணம் செய்து பெற்றோர்களின் எதிர்ப்புக்கு ஆளானவர்களுக்கு ராமஜெயம் ஆதரவு கொடுத்து தங்க வைத்துள்ளார்.
சில காலங்களில் அந்த வாலிபருக்கும் அப்பெண்ணுக்கும் மனக்கசப்புகள் வரவே வாலிபர் பிரிந்து விட்டார். தற்போது அந்தப்பெண் ராமஜெயத்தின் முழுக்கட்டுப்பாட்டில் வந்து விட்டார்.
இந்நிலையில் தன் மனைவி ராமஜெயத்துடன் சேர்ந்து விட்டாரே என்ற கோபத்தில் அந்த தூத்துக்குடி வாலிபர் கூலிப்படையை ஏவி கொலை செய்திருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
மற்றொருபுறம் காதலித்து கணவனால் கைவிடப்பட்ட மருத்துவத் தாதி ஒருவரும் ராமஜெயத்தின் கட்டுப்பாட்டில் இருந்து வந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்த தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ள பொலிஸார் குற்றவாளிகளை விரைவில் பிடிப்போம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment