Translate

Friday, 6 April 2012

நல்லிணக்க ஆணைக்குழு முன் சாட்சியமளித்த பெண் நாலாம் மாடிக்கு அழைப்பு – சாட்சிகள் மத்தியில் அச்சம்

Posted Imageசிறிலங்காவின் நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த - கணவனை இழந்த பெண் ஒருவர் சிறிலங்கா பயங்கரவாத தடுப்பு காவல்துறையினரால் விசாரணைக்காக கொழும்புக்கு அழைக்கப்பட்டுள்ளது, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியளித்தோர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற பெண்ணை, நாளை விசாரணைக்கு வரவேண்டும் என்று கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவு, கல்முனை காவல்துறை ஊடாக அறிவித்துள்ளது.

சில மாதங்களுக்கு முன்னரும் இவரை சிறிலங்காவின் குற்றப் புலனாய்வுத்துறையினர் விசாரணைக்காக கொழும்புக்கு அழைத்திருந்தனர்.

ஆனால் அவர் அங்கு செல்ல மறுப்புத் தெரிவித்திருந்துடன், அதுபற்றி நல்லிணக்க ஆணைக்குழுவிடமும் முறையிட்டிருந்தார்.

இதையடுத்து, கல்முனையில் வாக்குமூலம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று நல்லிணக்க ஆணைக்குழு அறிவித்திருந்ததுடன், சிறிலங்கா குற்றப்புலனாய்வுப் பிரிவினரும் கல்முனையில் வாக்குமூலம் பெறப்படும் என்று தெரிவித்திருந்தனர்.

இந்தநிலையில், கொழும்பு பயங்கரவாத தடுப்பு பிரிவு அவருக்கு இப்போது அழைப்பு விடுத்துள்ளது.

இதுதொடர்பாக மனிதஉரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்துக்குக் கொண்டு வந்துள்ளதாக பூங்கோதை தெரிவித்தார்.

தற்போது கொழும்புக்குச் சென்று வரக்கூடிய பாதுகாப்பான சூழ்நிலை தனக்கு இல்லை என்பதால் தன்னால் அங்கு செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

இவர் ஏற்கனவே கொழும்பு பயங்கரவாத தடுப்புப் பிரிவினால் ஏற்கனவே தடுத்து வைக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
http://www.puthinapp...?20120406105938 

No comments:

Post a Comment