இலங்கை அரசாங்கம் அமைத்த நல்லிணக்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியமளித்த கல்முனையைச் சேர்ந்த இரத்தினம் பூங்கோதை என்ற கணவனை இழந்தப் பெண், எதிர்வரும் சனிக்கிழமையன்று விசாரணைக்கு வரவேண்டுமென்று கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பரிவு கல்முனை பொலிஸ் ஊடாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்னர், குற்றப் புலனாய்வுத் துறையினரால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட போது அவர் கொழும்பு செல்ல மறுத்தார்.
அதனையடுத்து, கல்முனையில் வாக்குமூலம் அளிப்பதற்கு ஏற்பாடு செய்யப்படும் என்று ஆணைக்குழு அறிவித்திருந்ததுடன் குற்றப் புலனாய்வு பிரிவினரும் கல்முனையில் வாக்குமூலம் பெறப்படும் என தெரிவித்திருந்தனர்.
இப்போது கொழும்பு பயங்கரவாத புலனாய்வு பிரிவினர் அழைத்திருக்கின்றமை தொடர்பாக மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கவனத்திற்கு தான் கொண்டு வந்துள்ளதாக தெரிவித்த பூங்கோதை, ஏற்கனவே தான் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்ததையும் நினைவுகூர்ந்தார்.
தற்போது கொழும்பிற்கு சென்று வரக் கூடிய பாதுகாப்பான சூழ்நிலை தனக்கு இல்லை என்பதால் தன்னால் அங்கு செல்ல முடியாதிருப்பதாகவும் அவர் கூறினார்
No comments:
Post a Comment