தனித் தனிக் கட்சிகளை பலப்படுத்துவதைத் தவிர்த்து தமிழ் தேசிய கூட்டமைப்பைப் பலப்படுத்துவதே இன்றைய தேவையாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடளுமன்ற உறுப்பினரும் பேச்சாளருமான சுரேஸ் பிறேமச்சந்திரன் ரிபிசியில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடலின் போது தெரிவித்துள்ளார்.
தற்போது கட்சிகளிடையே முரண்பாடுகள் அற்ற நிலை உள்ள அதேவேளை தமிழ் மக்களின் பிரச்சனைகள் தீர்க்கப்படவேண்டும் என்ற ஒரே கருத்தினைக் கொண்டிருப்பதையும் காணக் கூடியதாக உள்ளது.
தமிழ் மக்களின் விடுதலையை வென்று அதிகாரங்களைப் பெற பல கட்சிகளாக செயற்படுவதில் பிரயேசனம் இல்லை. தனித் தனி கட்சிகள் கிராமம் கிராமமாக கிளைகளை அமைப்பாதானது இலங்கை அரசிற்கு சாதகமான நடவடிக்கையாக அமையும். அனைவரும் ஒன்றாக சேர்ந்து செயற்பட வேண்டும் என்கின்ற கருத்தே மக்களிடையே மேலேங்கி உள்ளது.
மக்கள் எதிர்பார்ப்பது ஒரு தீர்வை தான். அதன் அடிப்படையில் தான் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு தேர்தல்களின் போது வாக்கு அளித்தனர். அதை நாம் நோக்காகக் கொண்டு ஒரு ஒற்றுமையைக் கட்டி எழுப்பா விட்டால் அது பெரும் தோல்வியையும் இழப்பையும் ஏற்படுத்தும். அந்தவகையில் தனித்தனிக் கட்சிகளை வளர்ப்பதை தவிர்ப்பது நல்லது எனவும் தெரிவித்தார்
இன்றைய நிலையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் உறுப்பினர்களை பேச வருமாறு இந்தியா அமெரிக்கா போன்ற நாடுகள் வலியுறுத்தியதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சர்வதேச நாடுகளுடன் பல்வேறு விடயங்கள் தொடர்பாகப் பேசினோம். அதேவேளை இந்தியாவுடன் பேசும்போது மீண்டும் ஒரு முறை இலங்கை அரசை பிணை எடுக்க வேண்டாம் என வலியுறுத்தினோம். நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையை நாம் ஏற்றுகொள்ளவில்லை எனவும் அது தொடர்பாக நாம் சர்வதேச நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தவில்லை எனவும் சுரேஸ் பிறேமசந்திரன் தெரிவித்தார்.
மனித உரிமை அமைப்புகள் அரசு சார்பற்ற நிறுவனங்கள் ஆகியன சர்வதேச விசாரணை தொடர்பாக நடவடிக்கை மேற்கொண்டதாகவும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை அமுல்படுத்தாவிட்டால் அது இன்னுமொரு கட்டத்தை நோக்கி நகரலாம் எனவும் தெரிவித்தார்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கை தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு அல்லது அமெரிக்காவிற்கு சரி எனப் பட்டால் அது இலங்கை அரசிற்கு பிழையாகத் தெரியலாம் எனவும் கூறினார்.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஜெனிவாவிற்கு போயிருந்தால் பல நாடுகளை சந்திகின்ற வாய்ப்பு ஏற்பட்டிருக்கும.; ஆனால் பல காரணங்களுக்காக நாம் போகவில்லை. ஆனால் அது தொடர்பாக தமிழத் தேசிய கூட்டமைப்பு விடுத்த அறிக்கை தமிழ் மக்களுக்கு சாதகமாக அமையவில்லை மாறக அது அரசிற்குச் சாதகமாக அமைந்ததுவிட்டது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் பாரிய பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை தனியாக 13 பாரளுமன்ற உறுப்பினர்கள் சாதித்து விட முடியாது. அதனை வெற்றிகரமாக கொண்டு செல்வதற்குப் புலம்பெயர்ந்த மக்களின் ஒத்துழைப்பு புத்திஜீவிகளின் ஒத்துழைப்பு மற்றும் பல்துறைசார்ந்த நிபுணத்துவம் பெற்றவர்களின் ஒத்துழைப்பு அவசியம் எனவும் தெரிவித்த அவர் அதற்கான ஆலோசனைகளை வழங்குமாறு கேட்டு கொண்டார்
அரசிடம் ஒரு வருடங்களாக பேசினோம் எவ்வித முன்னேற்றமும்; இல்லை. நாம் ஒரு தீர்வு திட்டத்தை முன்வைத்தோம். ஆனால் இப்பேச்சு வார்த்தை காலத்ததை வீண் அடிக்கும் நிலையாகவே இருந்தது. இப்பேச்சு வார்த்தை இந்தியாவிற்கும் சர்வதேசத்திற்க்கும் காட்டவேண்டும் என்பதற்காக நடத்;தப்பட்டது.
இப்பேச்சு வார்த்தை முன்நோக்கி நடத்துவதற்காக ஜனாதிபதியின் சகோதரர் பசில் ராஜபக்சவை சந்தித்தோம். அப்பொழுது திரு சம்பந்தன் அவர்கள் பாரளுமன்றத்தில் தேவையான ஒத்துழைப்பு வழங்க தயார் என கூறினார். அதற்கு பசில் ராஜபக்ச நீங்கள் பாரளுமன்றத்தில் உதவி செய்யலாம். ஆனால் பௌத்த மக்களின் வாக்குகள் கிடைக்காமால் போய்விடும் என கூறினார். எனவே அவர்கள் பௌத்த இனவாத சிந்தனையுடன் இருப்பதை நாம் காணக்கூடியதாக உள்ளது.
இருதரப்பு பேச்சு வார்த்தை நடத்தி முடிவெடுக்க முடியாத நிலையில் பல தரப்பினரை உள்ளடக்கிய கடும்போக்கினைக் கொண்ட பாரளுமன்ற குழுவிற்குச் செல்வதில் அர்த்தமில்லை. எனவே தான் மூன்றாம் தரப்பினைப் பற்றி சிந்திக்கவேண்டியுள்ளது. ஆனால் இலங்கை அரசு மூன்றாம் தரப்பினை ஏற்றுகொள்ளாது என்பதையும் நான் அறிவேன். இது தொடர்பாக புலம்பெயர்ந்த மக்கள் தங்களின் ஆலோசனையை வழங்கினால் அவற்றையும் கவனத்தில் கொண்டு ஆலோசிக்கவும் தயார் எனவும் தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு வி.சிவலிங்கம் ஜேர்மனிய ரிபிசியின் அரசியல் ஆய்வாளர் திரு செ ஜெகநாதன் ஆகியோர் கலந்து கொண்டு உரையாடினார்.

No comments:
Post a Comment