Translate

Saturday, 7 April 2012

குமார மாத்தையா கைது செய்யப்பட்டார்! .


ஜே.வி.பி.யிலிருந்து பிரிந்த குழுவின் தலைவரான பிரேம்குமார் குணரட்னம் மற்றும் ஜே.வி.பி. அரசியல் குழுவின் முன்னாள் உறுப்பினரும் ஜே.வி.பி. மகளிர் பிரிவின் முன்னாள் தலைவியுமான திமுது ஆட்டிகல ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப்பிரிவு செய்தி வெளியிட்டுள்ளது.
பிரேம்குமார் குணரட்னம் கிரிபத்கொடையில் வைத்தும், திமுத்து ஆட்டிகல தலவத்துகொடயில் வைத்தும் கைது செய்யப்பட்டுள்ளதாக முன்னிலை சோசலிசக் கட்சியின் ஊடகப் பிரிவைச் சேர்ந்த ஜனக சுதார தெரிவித்தார். இது தொடர்பாக பொலிஸாரிடம் கேட்டபோது இக்கைது குறித்து தமக்குத் தெரியாது எனக் கூறினர்.
பிரேம்குமார் குணரட்னம் தலைமையிலான ஜே.வி.பி மாற்றுக்குழுவினர் மக்கள் பேராட்ட இயக்கத்தையும்,முன்னிலை சோசலிசக் கட்சியையும் ஸ்தாபித்தனர்.அதேவேளை திமுத்து ஆட்டிகல, சுதந்திரத்திற்கான பெண்கள் இயக்கம் எனும் புதிய அமைப்பின் தலைவியாவார் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment