Translate

Friday, 6 April 2012

யாழ் சென்று திரும்பிய வணிகர் காணாமல் போயுள்ளார்!


யாழ் சென்று திரும்பிய வணிகர் காணாமல் போயுள்ளார்!

கொழும்பினை வாழ்இடமாக கொண்ட 45 அகவையுடைய ன சிவஞானம் இரவிச்சந்திரன் என்பர் அவரது சொந்த ஊரான கரைநகருக்கு சென்று திரும்பும் போது காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 29ம் திகதி கொழும்பு 13ல் வசிக்கும் குறித்த வணிகர் தனது சொந்த ஊரான காரைநகருக்குச் சென்று பின்னரர் கொழும்புக்கு பயணமாகியுள்ளார். இவர் வீடு திரும்பாமையாலும் தொடர்புகள் எவையும் கிடைக்கப்பெறாமையாலும் குடும்பத்தினர் கொழும்பு 13 காவற்றுறையினரிடம் முறைப்பாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவர் சென்ற பேருந்து இடையில் பழுதடைந்து நின்றதாகவும் அதன்போது கீழே இறங்கியவர் மீண்டும் பேருந்து புறப்படும் போது பேருந்துக்கு திரும்வில்லை எனக்குறப்படுகின்றது காரைநகர் கோவளத்தைச் சேர்ந்தவரும் கொழும்பு 13 வசிப்பிடமாக கொண்டவருமான சிவஞானம் இரவிச்சந்திரன் என்ற வணிகரே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக முறையிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment