Translate

Friday, 6 April 2012

கொழும்பு தமிழ்நாட்டில் வெள்ளைவானில் தமிழ் நபர் கடத்தல் : மனோவி டம் முறைப்பாடு _


  கொழும்பு கிராண்ட்பாஸ் பொலிஸ் பிரிவிற்கு உள்வரும் தமிழ்நாடு என்று அழைக்கப்படும் நவகளனிபுர பகுதியில் வெள்ளை வேனில் வந்த நபர்களால் பாலகிருஷ்ணன் ஆனந்தன் என்ற 45 வயது நபர் கடத்தி செல்லப்பட்டுள்ளதாக, ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோ கணேசனிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 


இது தொடர்பில் ஜ.ம.மு. ஊடக செயலகம் விடுத்துள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

பாலகிருஷ்ணன் ஆனந்தன் தனது குழந்தையைப் பாடசாலையில் சேர்த்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் இன்று காலை 8 மணியளவில் வீடு திரும்பும் வழியில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கொழும்பு பேஸ்லைன் சாலையிலிருந்து தமிழ்நாடு குடியிருப்புப் பகுதிக்கு செல்லும் வீதியில் காத்திருந்த வெள்ளை வான் நபர்கள், பாலகிருஷ்ணன் ஆனந்தனின் வண்டியை முட்டி மோதி வீழ்த்தி விட்டு, அவரை பலவந்தமாகக் கடத்தி சென்றுள்ளார்கள்.

மக்கள் கண்காணிப்பு குழு ஏற்பாட்டாளர் என்ற முறையில் ஜ.ம.மு. தலைவர் மனோ கணேசனிடம் இது தொடர்பில் கடத்தப்பட்டவரின் குடும்பத்தவர்களால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. __

No comments:

Post a Comment