Translate

Friday, 6 April 2012

வட,கிழக்கில் புலி செயற்பாடு இருப்பதான செய்தியில் உண்மையில்லை : இராணுவப் பேச்சாளர் _


  வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளின் நடவடிக்கைகள் காணப்படுவதாக வெளியான செய்திகளில் உண்மையில்லை. உள்ளார்ந்த பாதுகாப்பிற்கு தேவையான அனைத்து பொறிமுறைகளையும் படையினர் மேற்கொண்டுள்ளனர் என்று இராணுவத் தலைமையகம் குறிப்பிட்டுள்ளது. 


இது தொடர்பாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவன் வணிகசூரிய கூறுகையில் : புலிகளின் செயற்பாடுகள் வட,கிழக்கில் காணப்படுவதாக ஊடகங்களில் செய்திகள் வெளிவந்தன. இச் செய்திகளுக்கான ஆதாரங்கள் இல்லை. கிழக்கில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்படி செய்திகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

எவ்வாறாயினும் நாட்டின் உள்ளார்ந்த பாதுகாப்புகளில் இராணுவம் உஷார் நிலையில் செயற்படுவதுடன் பொலிஸாருக்கு உதவும் நோக்கில் பல விடயங்களையும் மேற்கொள்கின்றோம் என்றார். _

No comments:

Post a Comment