Translate

Friday 6 April 2012

தமிழர் வளங்களைச் சூறையாடும் ஆளும்தரப்பினர்

வடமாகாண ஆளுநரினால் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரமேம்பாட்டிற்கென வழங்கப்பட்ட 50 ஏக்கர் நிலத்தில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் ஆதரவாளர் ஒருவர் 4 ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
முள்ளியவளை மேற்கு – ஐயனார் குடியிருப்பு பகுதியில் 50 ஏக்கர் நிலப்பகுதி கைத்தொழில் பூங்கா அமைப்பதற்கென கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் வழங்கப்பட்டடுள்ளது.
எனினும் நீதியீட்டம் வழங்கப்படாமையினால் கைத்தொழில் பூங்கா அமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்படாமலேயே இருந்தது. இந்த நிலையில் அமைச்சர் றிசாட் பதியூதீனின் உறவினர் என தன்னை கூறிக்கொண்டு புத்தளத்திலிருந்து ஒருவர் வந்துள்ளார்.
வந்தவர் குறித்த 50 ஏக்கர் காணியில் 4 ஏக்கர் நிலத்தை வளைத்துப்போட்டு எந்தவிதமான அனுமதியும் பெறாமல் காட்டு மரங்களை வெட்டிவந்து காணிக்கான சுற்றுவேலியையும், காணியில்  குடிசையொன்றையும் அமைத்துவிட்டார்.
மேலும் அமைச்சரின் உறவினரில் ஒருவரான இப்றாஹிமின் நண்பரே குறித்த நபர் எனவும் அவர் புத்தளத்திலிருந்து வந்திருப்பதாகவும் அவரால் எந்தப் பிரச்சினையும் ஏற்படாது விடயத்தை அப்படியே விட்டுவிடுங்கள் எனவும் அவர் அறிவுரை கூறியுள்ளார்.
இதேபோன்று  குறித்தநபர் தான் ஆக்கிரமித்துள்ள காணியில் வீட்டை அமைப்பதற்கும், காணிக்கான சுற்றுவேலியை அமைப்பதற்கும் பெருமளவு காட்டு மரங்களை அனுமதியின்றியே வெட்டிவந்துள்ளார்.
இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் மாவட்டத்தில் தமிழர்கள் மண்வெட்டிப் பிடிக்கு ஒரு மரத்துண்டை வெட்டியதற்காக கூட வழக்குத் தொடரப்பட்ட சம்பவங்கள் அதிகமாகவுள்ளன.
ஆனால் குறித்த நபர்மீது எந்த நடவடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை. இது தொடர்பாக மக்கள் விசனம் தெரிவிப்பதாக அங்கிருக்கும் சங்கதி செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

No comments:

Post a Comment