Translate

Friday 6 April 2012

இலங்கையில் காந்தி சிலை சேதம்

இலங்கையின் கிழக்கு நகரமான பட்டிகலோயாவில் அமைந்துள்ள மகாத்மா காந்தி உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் சிலைகள் சேதப்படுத்தப்பட்டுள்ளன. காந்தி சிலையோடு, முன்னாள் இங்கிலாந்து ஆட்சியாளரான பாடன் பவல் பிரபு, மற்றும் 2 தமிழ் அறிஞர்களின் சிலைகளும் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

 
சிலைகள் சேதம் செய்யப்பட்டது தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வழக்கு பற்றி பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் அஜித் ரொஹானா, இது கலைப் பொருள்களை அழிக்க நடந்துள்ள முயற்சி என்றும், இவ்வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவதற்காக தனி போலீஸ் படை அமைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.
சமீபத்தில் ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அமெரிக்கா கொண்டு வந்த இந்த தீர்மானத்தை இந்தியா ஆதரித்ததால் இலங்கை கடும் அதிர்ச்சி அடைந்தது.  
 
இதனால் இலங்கையில் அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
 
அதன் தொடர்ச்சியாக, தற்போது இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சிலை இலங்கையில் சேதப்படுத்தப்பட்டிருப்பது, இந்தியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

No comments:

Post a Comment