Translate

Friday, 6 April 2012

எரிபொருளையும் நிரப்பி காசையும் கொள்ளையடித்த கும்பலுக்கு வலைவீச்சு !

நொச்சியாகம பிரதேசத்தில் 4,300 ரூபாவிற்கு எரிபொருள் நிரப்பியதன் பின்னர் அங்கிருந்த 68 ஆயிரம் ரூபாவினையும் ஒரு குழுவினர் எடுத்துச் சென்றுள்ளனர். இச் சம்பவம் இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவத்தில் ஐவர் அடங்கிய குழு ஒன்று செயற்பட்டுள்ளது. இவர்கள் எரிபொருள் நிலையத்தில், படு நிதானமாக எரிபொருளை நிரப்பி விட்டு பின்னர் அங்கே கடமை புரிந்த ஊழியர் ஒருவருக்கு கொலை மிரட்டல் விடுத்து பணத்தை எடுத்துச் சென்றுள்ளனர். 


இந் நபர்கள் பயணித்த வாகனம் தொடர்பிலும் அதனுடைய இலக்கம் தொடர்பிலும் தகவல் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி இந்த வாகனத்தில் பயணம் செய்த நபர்களைப் பொலிசார் வலைவீசித் தேடிவருகின்றனராம். மாட்டுவர்களா இவர்கள் ?

No comments:

Post a Comment