
இதே போன்று மட்டக்களப்பு நகரில் உள்ள ஆனைப்பந்தி விபுலானந்தா மகளிர் கல்லூரியில் உள்ள சுவாமி விபுலானந்தர் சிலையும் மட்டக்களப்பு கல்வி வலயத்தில் உள்ள புலவர்மணி பெரியதம்பிப்பிள்ளையின் சிலைகளும் சேதமாக்கப்பட்டுள்ளது.
சிலைகள் சேதம் செய்யப்பட்டது தொடர்பாக காவல்துறை விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமை குழு கூட்டத்தில், இலங்கைக்கு எதிராக போர்க்குற்ற மனித உரிமை மீறல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை பொறுத்துக்கொள்ள முடியாத இலங்கையினர், அமெரிக்கா மற்றும் இந்தியாவுக்கு எதிராக தொடர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்தியாவின் தேசத் தந்தை மகாத்மா காந்தியின் சிலை சேதப்படுத்தப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
No comments:
Post a Comment