Translate

Saturday, 7 April 2012

அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்களாம்;


அமெரிக்க நாடுகளில் விடுதலைப் புலிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபடுகிறார்களாம்; தமரா குணநாயகம் 
லத்தீன் அமெரிக்க நாடுகளில் தமிழீழ விடுதலைப்புலிகள் தீவிர பிரச்சாரங்களில் ஈடுபட்டு வருவதாகவும் ஜெனீவாவிற்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி தமரா குணநாயகம் குறிப்பிட்டுள்ளார்.

போர் முடிவுக்கு வந்த பின்னர் விடுதலைப் புலிகள் தமது கடல் கடந்த செயற்பாடுகளை அதிகரித்து வருகின்றனர். அவர்கள் தற்போது லத்தீன் அமெரிக்க நாடுகளில் நுழைந்துள்ளனர். இவர்களின் பிரச்சார நடவடிக்கையினை முறியடிக்க வேண்டும். இல்லையெனில் பாரிய பிரச்சனைகள் ஏற்படும். எனத் தெரிவித்துள்ள தமரா,
இலங்கைத் தூதரகங்கள் லத்தீன் அமெரிக்காவின் பிரேஸில் மற்றும் கியூபா ஆகிய இரண்டு நாடுகளில் மட்டுமே காணப்படுகின்றதாக சுட்டிக்காட்டியதுடன். விடுதலைப் புலிகளின் செயற்பாடுகளை கட்டுப்படுத்த உலகில் எல்லா பிராந்தியங்களையும் கவனிக்கத்தக்க வகையில், இலங்கையின் தூதரகங்கள் அமைய வேண்டும். என குறிப்பிட்டார்.
அண்மைக்காலமாக அர்ஜென்டீனாவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் அதிகரித்துச் செல்கின்றதாகவும் ஜெனிவா மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை தனது கொள்கைகளை விட்டுக் கொடுக்காது செயற்பட்டது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

No comments:

Post a Comment