பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும்......
தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மகிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது வேலுப்பிளை பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். அதனை எவராலும் அழித்துவிடமுடியாது என புதிய இடதுசாரி முன்னணியின் தலைவரும் தெஹிவளை - கல்கிஸ்சை மாநகர சபை உறுப்பினருமான விக்கிரமபாகு கருணாரட்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் நாளிதழுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.புலிகளின் தலைவர் பிரபாகரன் தான் பிறந்த மண்ணுக்காக விடுதலை வேண்டிப் போராடியவர். அவர் தாய் மண்ணுக்காக முள்ளி வாய்க்கால்வரை சென்று தனது உயிரையே கொடுக்கத் துணிந்தவர். அவர் உயிருக்குப் பயந்து ஓடி ஒளியவில்லை. அவரின் குடும்பமே மண்ணுக்காகத் தன்னைத் தியாகம் செய்தது.
பிரபாகரன் தமிழர்களின் உரிமைகளையும் அடையாளங்களையும், வளங்களையும் பாதுகாக்கவே போராடினார். தான் பிறந்த மண்ணைக் காப்பதற்கு இறுதிவரை பாடுபட்டார்.
அவரின் கொள்கைகளை நாம் ஏற்கமாட்டோம். அவர் சிற்சில தவறுகளை இழைத்திருந்தாலும் அவர் ஒரு சிறந்த விடுதலைப் போராளி. அதனை நாம் ஒருபோதும் மறுக்க மாட்டோம். அவர் தேசத்துரோகி அல்லர். பிரபாகரன் என்ற நாமம் இன்னும் இரண்டாயிரம் மூவாயிரம் வருடங்களுக்கு வரலாற்றில் வாழும். இதனை எவராலும் அழித்துவிடமுடியாது. இது உண்மையும்கூட.
தாய்நாட்டு வளங்களை விற்பனைசெய்து பிழைப்பு நடத்தும் ஜனாதிபதி மஹிந்தவுடன் ஒப்பிடுகையில் தாய்மண் மீது பிரபாகரன் அதிக பற்றைக் கொண்டிருந்தார். மக்களை வீதியில் இறக்கிப் போராடித்தான் தேசப்பற்றைக் காட்டவேண்டுமென்றில்லை. அது மனதில் இருந்தால்போதும். பொருள்களின் விலைகளைத் தொடர்ச்சியாக அதிகரித்து மக்களின் அடிவயிற்றில் அடிக்கும் மஹிந்த அரசு முதலில் நிர்வாக முறைமையைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் ஏனைய விடயங்களைப் பற்றிச் சிந்திக்கலாம்; பார்க்கலாம் எனவும் விக்ரமபாகு கூறியுள்ளார்.
No comments:
Post a Comment