Translate

Saturday 7 April 2012

இலங்கை செல்லும் குழுவில் 7 தமிழக எம்.பி.க்கள்

வரும் 16-ந்தேதி இலங்கை செல்லும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவில் 7 தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம்பெறுகின்றனர்

ஈழத்தமிழர்கள் நிலை பற்றி நேரில் கண்டறிய இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு வரும் 16-ந்தேதி இலங்கைக்கு செல்கிறது. இந்த குழுவில் 14 பேர் இடம்பெறுகின்றனர். குழுவிற்கு நாடாளுமன்ற எதிர்கட்சி தலைவரும், பாஜக நாடாளுமன்ற உறுப்பினருமான சுஷ்மா சுவராஜ் தலைமை தாங்குகிறார்.


இந்த குழுவில் 7 பேர் தமிழகத்தை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் இடம் பெறுகின்றனர். அதன்படி, அதிமுக சார்பில் ரபி பெர்னாண்ட், திமுக சார்பில் டிகேஎஸ். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் ரங்கராஜன், காங்கிரஸ் சார்பில் கிருஷ்ணசாமி, சுதர்சன நாச்சியப்பன், சித்தன், மாணிக்கதாகூர் ஆகியோர் செல்கின்றனர்.

இந்த குழுவில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன், கம்யூனிஸ்டு கட்சியின் டி.ராஜா ஆகியோர் தங்களையும் குழுவில் சேர்க்க கோரிக்கை விடுத்திருந்தனர். ஆனால், இதுக்குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என தெரிகிறது.

இலங்கை செல்லும் இந்த நாடாளுமன்ற குழு வரும் 25-ந்தேதிவரை சுற்றுப்பயணம் மேற்கொண்டு, தமிழர்களிடம் நேரில் சந்தித்து, நிலைமையை ஆராய்கின்றனர். இந்தியா சார்பில் அளிக்கப்பட்டுள்ள உதவிகளை ஆய்வு செய்யும் அவர்கள், அடுத்த கட்டமாக எடுக்க வேண்டிய நடவடிக்கை குறித்தும் கேட்டறிய உள்ளனர்.

No comments:

Post a Comment