Translate

Saturday 7 April 2012

ஜெனீவா பிரேரணையின் பின்னணியில் இலங்கையை பழிவாங்கும் நோக்கமே உள்ளது-சம்பிக்க

மகிந்தா அரசின் படுகொலைகள் அதிர்ச்சி படங்கள்
தமிழ் மக்கள் நாட்டில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் வாழ்கின்றனர் அவர்களது கலாசாரங்களையும் பாதுகாக்கிறது அரசு கூறுகிறார் சம்பிக்க 


ஜெனீவா பிரேரணையின் பின்னணியில் இலங்கையை பழிவாங்கும் நோக்கமே உள்ளது. எனவே இவற்றிற்கு மண்டியிட்டு சாவதை விட சண்டையிட்டு மடிவதே மேல். இதற்கு மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும் என மக்களை சண்டைக்கு இழுக்கிறார் சம்பிக்க.
நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளை நாட்டில் நடைமுறைப்படுத்தியோ அல்லது ஜெனீவா தீர்மானங்களுக்கு அடிபணிந்தோ எமது நாட்டைக் காட்டிக் கொடுக்கப் போவதில்லை.
இது தொடர்பாக அமைச்சர் சம்பிக்க ரணவக்க தொடர்ந்து கூறுகையில்,
இலங்கையில் தமிழ், சிங்கள உறவில் பிரிவினை வாதத்தினை ஏற்படுத்துவதற்காகவே அமெரிக்காவும் இந்தியாவும் செயற்பட்டு வருகின்றது.
சர்வதேசத்தினுடைய நாட்டிற்கு எதிரான சூழ்ச்சிகளுக்கு உள்நாட்டு துரோகிகள் பலரும் பின்னணியில் உள்ளனர்.
அதேபோன்று சம்பந்தன் குழுவினர் தேசிய அரசியலில் ஈடுபட வேண்டும். சர்வதேசத்திடம் கோள் சொல்வதால் எவ்விதமான நன்மைகளும் தமிழ் மக்களுக்கு கிடைக்கப் போவதில்லை.
உள்நாட்டு யுத்தம் முடிவடைந்து மூன்றாவது தமிழ் சிங்கள புத்தாண்டை இலங்கையில் ஒற்றுமையாக கொண்டாடுகின்றனர். தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நிலையான சமாதானம் மற்றும் சுதந்திரம் என்பவற்றை சீரழிக்க சர்வதேச நாடுகள் செயற்படுகின்றன. இதற்கான காரணகர்த்தாக்களாக அமெரிக்காவும் இந்தியாவுமே உள்ளன.
நாட்டில் இறுதிக்கட்ட யுத்தத்தில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றதாக கூறி போலியான போர்க் குற்றச்சாட்டுகளை காரணங்காட்டி அமெரிக்கா இலங்கையின் உள்ளார்ந்த விடயங்களில் மூக்கை நுழைக்கின்றது.
ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட அமெரிக்கப் பிரேரணையின் பின்னணியில் இலங்கையை பழிவாங்கும் நோக்கமே உள்ளது. எனவே மண்டியிட்டு சாவதை விட சண்டையிட்டு மடிவதே மேல். இதற்கு மூவின மக்களும் ஓரணியில் திரள வேண்டும்.
இருப்பினும் தமிழ் மக்கள் நாட்டில் சுதந்திரமாகவும் நிம்மதியாகவும் தற்போது வாழ்ந்து வருகின்றனர்.  அவர்களது கலாசாரம் மற்றும் மரபுரிமைகள் என அவர்களது அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்படுகின்றன.
அவற்றைப் பாதுகாக்க அரசாங்கம் மிகவும் பங்களிப்புடன் செயற்பட்டு வருகின்றது. எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அரசாங்கம் தமிழ் மக்களை புறந்தள்ளி விடவில்லை என்பதை அனைவரும் உணர வேண்டும்.
தமிழ் சிங்கள ஒற்றுமையை சீரழிக்க அந்நிய சக்திகள் பாரியளவில் மேற்கொண்டு வருகின்றனர் ஆனால் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒரு போதும் இடமளிக்கக் கூடாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment