Translate

Friday, 6 April 2012

இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழு : அதிமுக இடம் பெறுகிறது

புதுடெல்லி :  எதிர்க்கட்சித் தலைவர் சுஷ்மா சுவராஜ் தலைமையில் எம்.பிக்கள் குழு வரும் ஏப்ரல் 16ம் தேதி முதல் 25ம் தேதி வரையில் இலங்கைக்கு பயணம் செல்கிறன்றனர். தமிழர் பகுதிகளை இக்குழுவினர் பார்வையிடவுள்ளனர்.  இக்குழுவில் தமிழக எம்.பிக்களும் பங்கேற்க வேண்டும்  என்ற கோரிக்கை முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து இலங்கை செல்லும் எம்.பிக்கள் குழுவில் அதிமுகவை சேர்ந்த தமிழக எம்.பி ரபி பெர்னார்ட் உட்பட தமிழகத்தின் பல்வேறு அரசியல் கட்சிகளை சேர்ந்த எம்.பிக்களும் இடம் பெறுகின்றனர். இக்குழுவில் திமுகவை சேர்ந்த டி.கே.எஸ்.இளங்கோவன் மற்றும்  காங்கிரஸை சேர்ந்த என்எஸ்வி சித்தன், சுதர்சன நாச்சியப்பன், மாணிக் தாகூர், கிருஷ்ணசாமி உள்ளிட்டோரும் இடம்பெறுகின்றனர். மேலும் கிடைத்த தகவலின் படி  மதிமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை இக்குழுவில் இடம்பெறவில்லை. இலங்கையின் நிர்ப்பந்தம் மற்றும் நிபந்தனை காரணமாகவே இவர்களை மத்திய அரசு குழுவில் இணைக்கவில்லை என்று கூறப்படுகிறது.

No comments:

Post a Comment