Translate

Tuesday, 3 April 2012

100வது உலகின் சக்திவாய்ந்த நபர் நவநீதம் பிள்ளை ?


100வது உலகின் சக்திவாய்ந்த நபர் நவநீதம் பிள்ளை ?

உலகின் பிரபல ரைம்ஸ் சஞ்சிகையின் 2012 ஆண்டுக்குரியஉலகின் சக்திவாய்ந்த நபர்களுக்குரிய வாக்கெடுப்பு தேர்வுப் பட்டியலில்ஐ.நா மனித உரிமைச் சபையின் ஆணையாளர் நவநீதம் பிள்ளை  இம்முறை இடம்பிடித்துள்ளார்.

 
71 அகவையுடைய தென்னாபிரிகத் தமிழரான நவி பிள்ளை அவர்களுக்கான விபரக் கொத்தில்திறமையான சட்டவாளர் என குறிப்பிட்டுள்ள ரைமஸ் சஞ்சிகை,நீண்டகாலமாக சமூக மட்டத்தில் பல்வேறு பணிகளை ஆற்றியவர் என குறிப்பிட்டுள்ளது.

 
சிரியா மற்றும் இலங்கையில் இடம்பெற்ற போர் குற்றங்கள் தொடர்பில் கவனத்தினை ஏற்படுத்தியவர் நவி பிள்ளை என குறிப்பிட்டுள்ள ரைம்ஸ், 1999 முதல் 2003ம் ஆண்டு வரையினாக காலப்பகுதியில்றுவாண்டா படுகொலைகளுக்கான போர் குற்றச விசாரணனையினை மேற்கொண்ட சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவராகவும் பணியாற்றியவர்என குறிப்பிட்டுள்ளது.

 
ரைம்ஸ் சஞ்சிகையின் 100உலகின் சக்தி வாய்ந்த நபர்களுக்கான வாக்கெடுப்புஎதிர்வரும் ஏப்ரல் 6ம் திகதி வரை இணையத்தில் திறந்து விடப்பட்டுள்ளது. ஏப்ரல் 17ம் நாள் அன்று ரைம்ஸ் சஞ்சிகையின் 100 நபர்கள் யார் அறிவிக்கப்படுமெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment