
இதன் அடிப்படையில் அவரை அவுஸ்திரேலியப் பொலிசார் விசாரிக்க முடியும் எனவும் கூறப்படுகிறது.
அவுஸ்திரேலிய சமஷ்டி தமிழர் அமைப்பானது, பாலித கொஹன்ன மீது கடுமையான குற்றச்சாட்டுகளைச் சுமத்தியுள்ளது. மனித குலத்துக்கு எதிரான நடவடிக்கை, இன அழிப்புக்கு துணைபோதல் என்பன இவற்றுள் முக்கியமானவை ஆகும். அவுஸ்திரேலியப் பொலிசார் இதுகுறித்து தமது கருசனையை வெளியிட்டுள்ளனர். தமிழர் அமைப்பு தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையை தாம் மதிப்பீடுசெய்வதாகவும், அதனை ஆராய்ந்து தாம் விரைவில் ஒரு முடிவை எடுக்க இருப்பதாகவும் பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பாலித கொஹன்ன ஐ.நாவுக்கான இலங்கையின் நிலந்தர வதிவிடப் பிரதிநிதியாக உள்ளார். அத்தோடு அவர் தற்சமயம் அவுஸ்திரேலியாவில் தங்கியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.
No comments:
Post a Comment