தமிழில் தேசியகீதம் பாடுவதா ? சீ சீ அது கேலிக்கூத்து என்கிறார் கோத்தபாய !
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ளவாறு தேசிய கீதத்தை தமிழில் பாடுவது முட்டாள்தனமானதும் நடைமுறைச் சாத்தியமற்றதுமான சிந்தனையென பாதுகாப்புச் செயலாளர் கொட்டாபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஆணைக்குழுவின் பரிந்துரைகளில் கூறப்பட்டுள்ள அரசியல் குறித்த பரிந்துரைகளும் அமுல்படுத்துவதற்கு மிகவும் கடினமானதெனவும் கொட்டாபாய ராஜபக்ச கூறியிருப்பதாக ஆங்கில இணையத்தளம் ஒன்றில் கூறப்பட்டுள்ளது.
அமுல்படுத்த முடியாத சில பரிந்துரைகள் தவிர்ந்த ஏனையவையை அமுல்படுத்தும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக பாதுகாப்புச் செயலர் மேலும் கூறியுள்ளார்.
சில அரசியல் வாதிகளால் கோரப்படுவதற்கமைவாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் மாகாண சபைகளுக்கு வழங்கப்படமாட்டாதெனவும் பாதுகாப்புச் செயலர் மேலும் கூறியுள்ளார்.
அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்துக்கு அமைவாக மாகாணங்களுக்கு அதிகாரங்களைப் பகிர்ந்தளித்தல் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருப்பதாகவும் கொட்டாபாய தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்கில் ஆயுதக் குழுக்களை ஒழித்தல், தடுப்புக் காவலில் உள்ள கைதிகளை விடுதலை செய்தல் போன்ற பரிந்துரைகள் அமுல்படுத்தப்படுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.
No comments:
Post a Comment