Translate

Saturday 7 April 2012

பேச்வார்த்தைகளில் மூன்றாம் தரப்பை இணைத்துக் கொள்ள முடியாது

பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பினரை இணைத்துக் கொள்ள முடியாது என அரசாங்கம் அறிவித்துள்ளது. இரு தரப்பு பேச்சுவார்த்தைகளின் போது மூன்றாம் தரப்பின் ஒத்துழைப்பை பெற்றுக் கொள்ள வேண்டுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமசந்திரன், அரசாங்கத்திடம் கோரியிருந்தார்.


எனினும், இந்தக் கோரிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது என அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. இவ்வாறான கோரிக்கைகளுக்கு அரசாங்கம் எப்போதும் ஆதரவளிக்காது என வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிற்கும் அரசாங்கத்திற்கும் இடையிலான இரு தரப்பு பேச்சுவார்த்தைகள் மீண்டும் தொடர்வதற்கான சாத்தியங்கள் மிகவும் குறைவாகக் காணப்படுவதாகக் குறிப்பிடப்படுகிறது. குறிப்பாக இரு தரப்பினரும் பல்வேறு நிபந்தனைகளை விதித்திருப்பதனால் இந்த நிலைமை ஏற்பட்டுள்ளது.

No comments:

Post a Comment