13ம் திருத்தச் சட்டத்தின் ஊடாக ஏற்கனவே நாட்டில் அதிகாரம் பகிரப்பட்டுள்ளதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
சில அரசியல்வாதிகளினால் விடுக்கப்படும் கோரிக்கைகைளை ஏற்றுக்கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக காணி மற்றும் காவல்துறை அதிகாரங்கள் தொடர்பில் சில அரசியல்வாதிகளின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழுவினால் பரிந்துரை செய்யப்பட்டுள்ள அரசியல் ரீதியான காரணிகளைத் தவிர்ந்த ஏனையவற்றை அமுல்படுத்துவதில் சிக்கல் கிடையாது என அவர் சுட்டி;காட்டியுள்ளார்.
தேசிய கீதத்தை தமிழ் மொழியில் பாட வேண்டும் என்ற பரிந்துரையை நடைமுறைப்படுத்த முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சில பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாகவும் சிலவற்றை அமுல்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வடக்கு கிழக்கில் இயங்கி வந்த ஆயுதக் குழுக்களின் ஆயுதங்களை களைதல் மற்றும் தடுத்து வைக்கப்பட்டுள்ள கைதிகளை விடுதலை செய்தல் ஆகிய பரிந்துரைகள் ஏற்கனவே நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment