இங்கிலாந்தில் பயிலும் இந்திய மற்றும் ஐரோப்பா அல்லாத நாடுகளை சார்ந்த மாணவர்கள்,தங்கள் கல்வி முடிவடைந்ததுதும் இரண்டு ஆண்டுகள் வரை இங்கிலாந்தில் பணிபுரியலாம் எனும் வசதி இதுவரை இருந்து வந்தது.
இதனால் இங்கிலாந்தில் பயில இந்திய மாணவர்கள் ஆர்வம் காட்டி வந்தனர். இந்தியா உள்பட அந்நிய நாட்டவர்களின் குடியேற்றத்தை தடுக்கும் வகையில் கேமரூன் அரசு,குடியேற்ற சட்ட திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளது.
அதன்படி இனிமேல் இங்கிலாந்தில் பயிலும் இந்திய மாணவர்கள் தங்கள் படிப்பு முடிந்ததும் நாடு திரும்ப வேண்டும். ஏற்கனவே செப்டம்பர் 2012 ம் ஆண்டிற்கான இங்கிலாந்து பல்கலை கழகங்களில் சேர விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.
எனினும் இச்சட்டத் திருத்தம் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு இங்கிலாந்து பல்கலைகழகங்களும், பிரிட்டிஷ் கவுன்சிலும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதனால் இங்கிலாந்தில் பயில விரும்பும் மாணவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் எனக் கருதப்படுகிறது.
இந்நிலையில் வரும் வெள்ளிக்கிழமை முதல் இவ்வசதி முடிவிற்கு வருவதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment