Translate

Saturday 7 April 2012

எவ்வளவு அழுத்தம் கொடுத்தாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம்: இலங்கை அரசு

கொழும்பு: மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் நாங்கள் அடிபணிய மாட்டோம் என்று இலங்கை அரசு தெரிவித்துள்ளது.

ஐ.நா. மனித உரிமைக்குழு கூட்டத்தில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டு வரப்பட்டது. ஆனால் அந்த தீர்மானத்தையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதனை செயல்படுத்தவிட மாட்டோம் என்று இலங்கை அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. தீர்மானம் கொண்டு வரப்பட்ட கையுடன் ஐரோப்பிய நாடுகளில் உள்ள சில தூதரகங்களை இலங்கை அரசு மூடப்போவதாக அறிவித்தது.


இலங்கைக்கு எதிராக வாக்களித்த இந்தியா மீது வருத்தம் இல்லை என்றும், இதனால் இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் பாதிப்பு ஏற்படவில்லை என்றும் இலங்கை அமைச்சர் குணசேகரா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது குறித்து இலங்கை அமைச்சரவையின் பேச்சாளர் லஷ்மண் யாப்பா அபேர்வர்த்தன செய்தியாளர்களிடம் கூறுகையில்,

நாட்டின் அடையாளத்திற்கு பங்கம் வராத வகையில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தவிருக்கிறோம். எங்கள் நாட்டிற்கு என்று தனித்துவம் உள்ளது. எனவே, நாட்டின் அடையாளத்திற்கு பங்கம் விளைவிக்கும் வகையில் மேற்கத்திய நாடுகள் மட்டுமின்றி வேறு எங்கிருந்து அழுத்தம் வந்தாலும் அடிபணிய மாட்டோம் என்றார்.

No comments:

Post a Comment