Translate

Friday, 1 July 2011

புறக்கணிப்பு போராட்டம் லண்டன் லோர்ட்ஸ்


ஊடக அறிக்கை

தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின்கிறிக்கெட் அணி பிரித்தானியாவில் விளையாடி கொண்டுஇருக்கும்வேளை பிரித்தானிய தமிழ் இளையோர் அமைப்பினால்முன்னெடுத்து செல்லப்படும் புறக்கணிப்பு போராட்டம் தனதுஇறுதி புறக்கணிப்பு போராட்டத்தை லண்டன் லோர்ட்ஸ்மைதானத்திற்கு முன்பாக நடத்தவுள்ளனர்.

 ஜூலை 03 ஆம் திகதிகாலை 10:00 மணிமுதல் மாலை 06:00 மணி வரை இடம்பெறும்.

கடந்த செவ்வாய்க்கிழமை தமிழீழத் தேசியக் கொடியைத்தாங்கியவாறு பிரித்தானிய தமிழ் இளையோர்கள் துண்டுப்பிரசுரங்களை வழங்கிக்கொண்டிருந்தபோது அங்கு சென்றசிங்களவர்கள் இளையோர்கள் மீது எச்சில் துப்பிதகாதவார்த்தைப் பிரயோகங்களால் திட்டியதுடன்தமிழீழ தேசிக்கொடியை அகற்ற வேண்டும் என பிரித்தானியகாவல்துறையினரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இளையோர் வைத்திருந்த கொடி தடை செய்யப்படவில்லைஎனவும்அதனை அவர்கள் வைத்திருக்கும் உரிமை உண்டுஎனவும் கூறிய பிரித்தானிய காவல்துறையினர்தாம் அந்தக்கொடியை அகற்றுமாறு கோரிக்கை விடுக்க மாட்டோம் எனதிட்டவட்டமாகக் கூறியிருந்தனர்.
சிங்கள காடையர்களின் நடைமுறை மற்றும் தமிழ்இளையோர்கள் வன்முறையைத் தவிர்த்த காரணத்தினால்,சிங்களவர்கள் மீது கோபம்கொண்ட பிரித்தானியகாவல்துறையினர்குழப்பம் விழைவித்த சிங்களவர்களின் பெயர்,விபரங்களைப் பதிவுசெய்துமிகக் கடுமையாக எச்சரிக்கைசெய்து அங்கிருந்து அகற்றியுள்ளனர்.
முன்னர் தமிழ் மக்கள் மேற்கொள்ளும் ஆர்ப்பாட்டங்களின்போதுமக்கள் தொகையைக் கண்டு அருகே செல்ல அஞ்சும்சிங்களவர்கள்இப்பொழுது அருகில் சென்று வன்முறையைப்பிரயோகிக்கும் அளவிற்கு துணிச்சல் பெற்றுள்ளமைக்கு,ஆர்ப்பாட்டங்களில் கலந்துகொள்ளும் தமிழ் மக்களின்எண்ணிக்கையே காரணம் என சுட்டிக்காட்டப்படுகின்றது.
தமிழின அழிப்பை மேற்கொண்ட சிறீலங்கா அரசாங்கத்தின்கிறிக்கெட் அணியைப் புறக்கணிக்க வேண்டும் எனக் கோரிதொடர் போராட்டங்களை மேற்கொண்டுவரும் பிரித்தானியதமிழ் இளையோர்கள்இதற்கு முன்னதாக இந்த மாதம் மட்டும்அக்ஸ்பிறிஜ்கார்டிஃப்லோர்ட்ஸ்பிறிஸ்ரல் போன்ற பலஇடங்களில் ஐந்து தடவைகள் ஆர்ப்பாட்டங்களைநடத்தியுள்ளனர்.

No comments:

Post a Comment