தமிழ் மக்கள் அரசியல் உரிமையை பெறுவதை நோக்காக் கொண்டிருப்பதாக மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் பி.அரியநேந்திரன் தெரிவித்துள்ளார்.
இவர்கள் அபிவிருத்தியைப் புறந்தள்ளி விட்டு அரசியல் உரிமை பெற முனைப்புடன் இருப்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
காரைதீவு பிரதேசத்தில் இடம் பெற்ற பிரதேச சபைக்கான தேர்தல் பிரச்சார கூட்டத்திலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது அரசாங்கத்துடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்ட போதிலும் அரசானது இணக்கம் காணப்பட்ட விடயங்கள் எதனையும் அமுல்படுத்தவில்லை எனினும் இது தொடர்பில் தாம் பொறுமை காத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் தமிழ் மக்கள் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்கு தமது ஆதரவினை வழங்கி வருகின்றனர். எனவே மக்கள் எமக்கு வாக்களித்து எமது வாக்குப் பலத்தை அதிகரிக்கச் செய்ய வேண்டும் என்று அவர் மேலும் கேட்டுக் கொண்டுள்ளார்.
No comments:
Post a Comment