Translate

Wednesday 29 June 2011

இலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய வேண்டும்: வைகோ


இலங்கையுடனான ஒப்பந்தங்களை இந்தியா ரத்து செய்ய வேண்டும்: வைகோ

வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும் என்று மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார். மதுராந்தகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய வைகோ,

இலங்கையில் தமிழர்கள் மீது ராஜபக்சே அரசு நடத்திய தாக்குதலுக்கு, பதிலடியாக இலங்கையுடனான வர்த்தக மற்றும் பொருளாதார ஒப்பந்தங்கள் அனைத்தையும் இந்தியா ரத்து செய்ய வேண்டும். தமிழர்கள் மீது இலங்கை கடற்படையினர் நடத்தி வரும் தாக்குதல் சம்பவங்கள் நீடித்து வருகிறது. இதை இந்தியா தடுத்து நிறுத்த வேண்டும்.
உலகல் பல நாடுகள் போர் நிறுத்தம் செய்ய வேண்டும் என்று கேட்டபோதும், 7 கோடி தமிழர்கள் குடிமக்களாக இருக்கக் கூடிய இந்திய நாட்டின் அரசு ஒப்புக்குக் கூட போரை நிறுத்தச் சொல்லவில்லை. தமிழின படுகொலைக்கு துணை போனது இந்திய அரசு. மன்னிக்க முடியாத துரோகம். இலங்கை அதிபர் ராஜபக்சேவை போர்க் குற்றவாளியாக அறிவித்து சர்வதேச நீதிமன்றம் மூலம் தண்டிக்க வேண்டும் என்றார்

No comments:

Post a Comment