வட்டக்கச்சி முருகன் கோயில் உடைக்கப்பட்டு விக்கிரகங்கள் திருட்டு!
கிளிநொச்சி, வட்டக்கச்சி முருகன் கோயில் கதவுகள் உடைக்கப்பட்டு 14 லட்சம் ரூபா பெறுமதியான சுவாமி விக்கிரகங்கள் திருடப்பட்டுள்ளன.
நேற்றுமுன்தினம் இரவு வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
நேற்றுமுன்தினம் இரவு வெள்ளிக்கிழமை இந்தச் சம்பவம் இடம்பெற்றது.
வட்டக்கச்சி, ஆறுமுகம் வீதியில் அமைந்துள்ள இந்தக் கோயிலின் வெளி வீதியில் இராணுவக் காவலரண் ஒன்று இருக்கிறது.
24 மணிநேரமும் அங்கு படையினர் கடமையில் இருக்கின்ற நிலையிலும் திருட்டு இடம்பெற்றுள்ளமை அடியார்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
ஐம்பொன்னாலான ஆறுமுகக் கடவுளின் விக்கிரகம் மற்றும் பிள்ளையார் சிலைகள் ஆகியனவே அபகரிக்கப்பட்டுள்ளன. ஆலயப் புனரமைப்புப் பணிகளுக்காக அண்மையில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டது.
அதனால் விக்கிரகங்கள் தனி மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தன. வெளிவீதியில் உள்ள காவலரணில் இரவு வேளையில் செல்வோர் சோதிக்கப்படுவது வழமை என்று மக்கள் கூறுகின்றனர்.
No comments:
Post a Comment