வத்தளையில் உள்ள ஒரு தமிழ் பாடசாலையையும் பேரினவாத சக்திகள் அபகரிக்க முயற்சி:மனோகணேசன்
வத்தளை தொகுதியிலே அமைந்துள்ள ஒரு தனித் தமிழ் பாடசாலையான வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் கலவன் வித்தியாலயம் அமைந்திருக்கும் காணியை தந்திரமாக அபகரிப்பதற்கு வத்தளையில் உள்ள சில பேரினவாத மற்றும் மதவாத சக்திகள் முயற்சி செய்கின்றன என ஜனநாயக மக்கள் முன்னணி தலைவர் மனோகணேசன் தெரிவித்துள்ளார்.
இது சம்பந்தமாக தன்னை, வத்தளை வாழ் தமிழ் மக்கள் பிரதிநிதிகள் குழு சந்தித்து தகவல்களை கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
வத்தளையிலே பெருந்தொகையான தமிழ் மக்கள் வாழ்கிறார்கள். எனினும் வத்தளையிலே முழுமையான தனித் தமிழ் பாடசாலை என்றும் ஒன்றும் கிடையாது. இதுதொடர்பான கோரிக்கை நீண்ட காலமாக இருந்தாலும்கூட இது சாத்தியமாகவில்லை என்பது தொடர்ந்து நிலவுகின்ற ஒரு பாரிய குறைப்பாடாகும். வத்தளையில் வாழ்கின்ற மிகவும் பின்தங்கிய ஏழை எளிய தமிழ் பிள்ளைகள் தங்களது ஆரம்ப கல்வியை மாத்திரம் பெற்றுக்கொள்வதற்கு முதலாம் வகுப்பிலிருந்து ஐந்தாம் வகுப்பு வரை நடத்துகின்ற ஒரே தனித் தமிழ் பாடசாலையாக வத்தளை ரோமன் கத்தோலிக்க அரசினர் தமிழ் வித்தியாலயம் விளங்குகின்றது.
இந்த பாடாசலை அமைந்துள்ள 60 பேர்ச்சஸ் காணி முற்று முழுதாக மேல்மாகாணசபை கல்வி திணைக்க ளத்திற்கு சட்டப்படி உரிமையானதாகும். இது தொடர்பிலான வர்த்தமானி பிரகடனம் 1962ஆம் ஆண்டிலேயே வெளியிடப்பட்டிருக்கின்றது. எனினும் இந்த காணி தங்களுக்கு உரிமையானது என அருகாமையில் அமைந்திருக் கக்கூடிய கத்தோலிக்க தேவாலயத்தை சார்ந்த பெரும்பான்மை இன பிரிவினர் தெரிவித்து வருகின்றனர். இது முற்றும் முழுதும் பிழையானதாகும். மாகாணசபைக்கு சொந்தமான ஒரு காணியில் ஏழை பிள்ளைகளின் கல்விக் காக நடத்தப்படுகின்ற ஒரு மாகாணசபை பாடசாலையை அந்த இடத்திலிருந்து பலாத்காரமாக அகற்றுவதற்கு எந்தவொரு மத நிறுவனத்திற்கும் அதிகாரம் கிடையாது - என்றார்.

No comments:
Post a Comment