Translate

Tuesday, 20 September 2011

மனித உரிமை பேரவையில் இலங்கைக்கு சிக்கலை கொடுக்கவுள்ள 16 அரச சார்பற்ற நிறுவனங்க

2012 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஜெனிவாவில் நடைபெறவுள்ள 19 ஆவது மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் போர்க் குற்றம் தொடர்பான இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கையும், ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் பான் கீ மூனின் அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


இக் கோரிக்கையை 16 சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் தலைவராக உள்ள உருகுவேயின் லாவுறா டியுபுனிலரோவிடம் வலியுறுத்தியுள்ளன. இது தொடர்பில் 16 அரச சார்பற்ற அமைப்புகளும் கடிதம் ஒன்றை அவருக்கு அனுப்பியுள்ளன.

2009 ஆம் ஆண்டு மே 23 ஆம் திகதியன்று இலங்கையின் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவும் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூனும் வெளியிட்ட அறிக்கையில், சர்வதேச மனித உரிமை சட்டங்களுக்கு ஏற்ப, வன்முறைகள் தொடர்பில் இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்ற வசனம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன்படி இலங்கை அரசாங்கம் தமது கடமையை நிறைவேற்ற வேண்டும். இறுதிப் போரில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பில் தமது நல்லிணக்கக் குழுவின் அறிக்கையை வெளியிட வேண்டும்.

ஏற்கனவே 17ஆவது மனித உரிமைகள் பேரவைக் கூட்டத்தின் போது இலங்கை எதிர்வரும் நவம்பர் மாதம் நல்லிணக்கக் குழுவின் அறிக்கை வெளியாகும் என்று தெரிவித்திருந்தது.

இதன் அடிப்படையில் அந்த அறிக்கையும் பான் கீ மூனின் நிபுணர் குழு அறிக்கையும் 19 ஆவது செயலமர்வில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்று சர்வதேச அரச சார்பற்ற அமைப்புக்கள் கோரியுள்ளன.

ஆபிரிக்க ஜனநாயக அமைப்பு,

சர்வதேச மன்னிப்புச்சபை,

மனித உரிமை மற்றும் அபிவிருத்தி தொடர்பான ஆசிய அமைப்பு

ஆசிய சட்டவாக்க நிலையம்,

கெய்ரோ மனித உரிமைகள் கற்கை மையம்,

பொதுநலவாய மனித உரிமைகள் அமைப்பு,

கிழக்கு மற்றும் ஆபிக்க மனித உரிமைகள் பாதுகாப்பு திட்டம்,

ஜேர்மன் மனித உரிமைகள் அமைப்பு,

மனித உரிமைகள் கண்காணிப்பகம்,

சர்வதேச ஜூமார் ஆணைக்குழு,

சர்வதேச நெருக்கடிக்கான குழு,

மனித உரிமைகளுக்கான சர்வதேச சம்மேளனம்,

இனத்துவேசம் மற்றும் அடக்குமுறைகளுக்கு எதிரான சர்வதேச அமைப்பு,

மனித உரிமைகளுக்கான சர்வதேச சேவை,

சர்வ தேச கத்தோலிக்க புத்திஜீவிகள் அமைப்பு மற்றும்

சித்திரவதைக்கு எதிரான உலக அமைப்பு என்பனவே இந்த வலியுறுத்தலை விடுத்துள்ளன.

http://akkinikkunchu.com/new/ 

No comments:

Post a Comment