Translate

Thursday 22 September 2011

உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரம்.....!

கடந்த ஐந்து ஆண்டு கால தமிழகக் காட்டாட்சியில் தமிழகமே துவண்டு விட்டது; மாறாக ஒரே ஒரு குடும்பமும், அக்குடும்பத்திற்கு 'ஜால்ரா' அடிப்பவர்களுமே பொருளீட்டினர். மேலும் அவர்கள் அடித்த 'கொட்டத்திற்குப்' பெரும்பாலும் அப்பாவிகள் மட்டும் இல்லாமல், சமூகத்தில் மிகப்பெரிய மனிதர்களும் பலியாயினர். இப்படிப் பலியானவர்களில் பல துறைகளில் சிறந்து விளங்கியவர்களும் அடக்கம். 


இதனாலேயே கடந்த தமிழகச் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்துத் துறையினரும் அ.இ.அ.தி.மு.க. ஆட்சி அமைய வேண்டும் என்று கடவுளை வேண்டினர். அவர்கள் எதிர்பார்த்தது போலவே ஆட்சியையும் அமைந்தது.

இந்தச் சூழ்நிலையில் உள்ளாட்சித் தேர்தல்களும் வர இருக்கின்றன. இந்த உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் தமிழக அ.தி.மு.க. அரசின் மக்கள் நலத் திட்டங்களை மட்டும் இன்றி, அதன் அறிவுப்பூர்வமான அணுகுமுறைகளையும், அனைவருக்கும் தேவையான, பொருளாதார மேம்பாட்டுக்கான முயற்சிகளையும் பெரிய அளவில் மக்கள் முன் கொண்டு செல்வது இன்றியமையாத தேவையாகிறது. ஏனென்றால் கடந்த கால அரசு நாட்டுக்கோ, மக்களுக்கோ எவ்வகையிலும் பயன் அற்ற திட்டங்களை வழங்கி விட்டு அவற்றையே 'மக்கள் நலத் திட்டங்கள்' என்று பொய்யுரை வழங்கி அவ்வுரையை மக்கள் மனதில் பதியவைத்து விட்டது என்ற நிலை தமிழகத்தின்- தமிழக மக்களின் துரதிர்ஷ்டம் என்று சொன்னால் அது மிகையாகாது.

இந்நிலையில் உண்மையில் மாநிலத்தின் வளர்ச்சிக்கான ஏராளமான திட்டங்களை நமது அ.இ.அ.தி.மு.க. அரசு வழங்கியுள்ள நிலையில் இத்திட்டங்கள் குறித்து பொது மக்களிடையே மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதே நாம் நமது மாநிலத்திற்கு- மாநில மக்களுக்குச் செய்யும் மிகப்பெரிய தொண்டாகும். இத்தொண்டே எதிர்வரும் உள்ளாட்சித் தேர்தல்களுக்கான பிரச்சாரமாக அமைய வேண்டும் என்பதே நமது உடனடித் தேவையாகும்.

இதற்கு மேல், 'மீடியா' எனப்படும் மிகுந்த ஆற்றல் மிக்க துறையும் கடந்த காட்டுமிராண்டி ஆட்சியினால் துவண்டு போனதால் அது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி மலர வேண்டும் என்ற கனவில் இருந்ததும் நமக்கு நன்றாகவே தெரியும். எனவே இந்த மீடியாவை- மீடியா வழங்கும் பணிகளை உள்ளாட்சித் தேர்தல் பிரச்சாரத்திற்கு நன்கு பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

எனவே இது போன்ற முதன்மையான கருத்துக்களை மைய்யமாக வைத்து நாம் உள்ளாட்சித் தேர்தல் பிரச்சார வியூகங்களை வகுக்க வேண்டும்.

No comments:

Post a Comment