உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து, கருணாநிதியின் பாணியில் சொன்னால், 'பொதுக்குழு கூடி முடிவெடுக்கும்' என்ற 'புருடா'விற்கெல்லாம் அப்பாற்பட்டு, கருணாநிதி சொந்தமாக எடுத்த ஒரு சுயநல முடிவுதான் 'தி.மு.க. தனித்துப் போட்டியிடும்' என்பதாகும்!
இந்த முடிவு குறித்துப் பலர் புருவத்தை உயர்த்தினர்- இதன் விளைவாக முதலில் தமிழகத்தில் நாம் சந்தித்த நிகழ்வு, கொண்டாட்டம் தான் என்பதே உண்மை- அதுவும் இரண்டாவது விடுதலைத் திருநாள் கொண்டாட்டம் போன்ற கொண்டாட்டம். அதுவும் சட்டமன்றத் தேர்தல் சமயத்திலேயே நாம் அனுபவப்பட்ட கொண்டாட்டம்தான்!
தி.மு.க. ஆதரவு மஞ்சள் பத்திரிகைகள் எல்லாம் இந்த, கருணாவின் அறிவிப்பைத் தொடர்ந்து 'காங்கிரஸ் கழற்றிவிடப் பட்டது' என்று கூக்குரலிட்டாலும், உண்மை என்பது காங்கிரஸ் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கு மட்டும் தான் தெரியும். ஏனென்றால், அவர்கள் தான் 'மூட்டைப் பூச்சியைப்' பார்ப்பது போல், கருணாநிதி கூட்டணியில் அங்கம் வகித்த போது பார்த்தவர்கள்.
இவ்விஷயத்தில், மிக கால தாமதமாகவே கருணாநிதியை நன்றாகப் புரிந்துள்ள திருமா, 'நாங்கள் சட்டமன்றத் தேர்தலிலேயே அ.இ.அ.தி.மு.க.-வுடன் சேர்ந்திருந்தால் பத்துத் தொகுதிகளிலாவது வெற்றிபெற்று இன்று சட்டப்பேரவையில் வீற்றிருந்திருப்போம். ஆனால், கருணாவின் மேல் வைத்த நம்பிக்கை ஒன்றிக்காக கருணாநிதியுடன் இருந்து இழப்புக்களைச் சந்தித்ததற்காக எங்களுக்கு இப்போது ஒரு தண்டனை அளித்துள்ளார், கருணாநிதி; இந்த அறிவிப்புக் குறித்து குறைந்தது ஒரு தகவல் கூட எங்களுக்குச் சொல்லவில்லை' என்று ராமச்சந்திரா மருத்துவ மனையில் சிகிச்சையில் இருக்கும் நிலையிலும் புலம்ப வைத்து விட்டார் கருணாநிதி என்ற உண்மையை AIADMK INTERNET FORUM உறுப்பினர்களாகிய நாம் மக்கள் முன் எடுத்து வைக்க வேண்டும்.
அதேபோல், 'எப்பொழுது அண்ணன் சாவான்; திண்ணை காலியாகும்' என்ற எதிர்பார்ப்பில் இருந்த காங்கிரஸ் கட்சியினரும் இப்போது ஒரு நிம்மதியைப் பெற்றுள்ளனர் என்ற உண்மையின் பின்னணியில், காங்கிரஸ் கழற்றிவிடப்பட்டதா என்ற கேள்விக்கே இடம் இல்லை என்பதே உண்மை.
கருணாவின் ஒரே எதிர்பார்ப்பு, சென்ற முறை போலவே டெல்லியில் இருந்து தலைவர்கள் வந்து தன்னைச் சந்திப்பார்கள்; அவர்களிடம் கனியை விடுவிக்க சிபாரிசு செய்யுமாறு பேரம் பேசலாம் என்ற சுயநலம் பொய்த்துப் போய் விட்டது; சுக்கு நூறாக உடைக்கப்பட்டுவிட்டது.
அவர்களும், கனியைச் சிக்கவைத்தும் கூட வெளியேறாத கருணாவை எப்படி வெளியேற்றுவது என்று புரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஒரு சிக்கலான நேரத்தில் இப்படியாவது ஒரு வழி பிறந்ததே என்று தமிழகம் முழுவதும் கொண்டாடி மகிழ்கின்றனர்! Please visit our new web at: www.aiadmkinternetwing.org

No comments:
Post a Comment