Translate

Thursday 22 September 2011

ஐ.நா.மனித உரிமை பேரவையில் இலங்கையின் போர்க்குற்றம்- கனடா நாளை பிரேரணை சமர்ப்பிக்கிறது!

Posted Imageஜெனிவாவில் தற்போது நடைபெற்றுவரும் மனித உரிமை பேரவையின் 18ஆவது கூட்டத்தொடரில் இலங்கையில் இடம்பெற்ற போர்க்குற்றம் தொடர்பான தீர்மானம் ஒன்றை நாளை வியாழக்கிழமை சமர்ப்பிக்க இருப்பதாக ஐ.நா.மனித உரிமை பேரவை வட்டாரங்கள் இன்று மாலை தெரிவித்தன.
18ஆவது கூட்டத்தொடரில் பிரேரணைகள் நாளை நண்பகல் ஒருமணிக்கு முதல் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்ற கால கெடு அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில் இதற்கு முன்னர் நாளை காலையில் கனடா இத்தீர்மானத்தை பேரவையில் சமர்ப்பிக்க உள்ளதாகவும், இந்த தீர்மானத்திற்கு அமெரிக்கா, பிரித்தானியா, ஒஸ்ரேலியா உட்பட ஐரோப்பிய நாடுகள் ஆதரவளிக்க உள்ளதாக தெரியவருகிறது.


கனடா நாளை காலை இலங்கையின் போர்க்குற்றம் தொடர்பான பிரேரணையை சமர்ப்பிக்க இருக்கிறது என்பதை அறிந்து கொண்ட சிறிலங்கா குழு இதை தடுப்பதற்கான முழு முயற்சிகளையும் மேற்கொண்டிருப்பதாகவும் ஜெனிவாவில் இருக்கும் நமது செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
இந்த பிரேரணை அடுத்த வாரம் விவாதத்திற்கு வரலாம் என தெரியவருகிறது. 18ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் 30ஆம் திகதியுடன் நிறைவடைகிறது.
இந்த பிரேரணை விவாதத்திற்கு வரும் பட்சத்தில் இந்தியா விவாதத்திலோ அல்லது வாக்கெடுப்பிலோ கலந்து கொள்ளாது ஒதுங்கியிருக்கலாம் என ஜெனிவாவில் உள்ள அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

http://www.thinakkathir.com/?p=19004   

No comments:

Post a Comment