Translate

Thursday, 22 September 2011

தென் சூடான் - நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் உயர்மட்டச் சந்திப்பு!


தென் சூடானிய அரசாங்கத்துக்கும், நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கும் இடையிலான உயர்மட்ட சந்திப்பொன்று ஜெனீவாவில் இடம்பெற்றுள்ளது.
இருதரப்பு நல்லுறவுகளை கட்டியெழுப்பும் நோக்கில் இடம்பெற்றுள்ள இச்சந்திப்பு குறித்து, நா.த.அரசாங்கத்தின் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
நாடு கடந்த​ தமிழீழ​ அரசாங்கத்தின் பிரதி வெளிவிவகார​ அமைச்சர் மாணிக்கவாசகர .கனகரட்னம், ஜ​.நாவுக்கான​ பிரதிநிதி முருகையா சுகிந்தன் ஆகிய பிரதிநிதிகளுக்கும், ஜரோப்பிய​ ஒன்றியத்திற்கான ​ தென்சூடானிய உயர் ஸ்தானிகர் பிரான்ஸிஸ் நஷாரியோ அவர்களுக்கும் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.

தென்சூடானினதும், தமிழீழ​ மக்களினதும் இருபக்க​ நலன்கள் குறித்த​ பல்வேறு வகையான​ விடயங்களுடன், மனித​ உரிமைகள் மற்றும் தென்சூடானில் அபிவிருத்தி திட்டங்கள் பற்றியதாகவும் இச்சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டது.
எதிர்காலத்தில் இரு அரசாங்களிடையிலான இராஜதந்திர​ உறவுகளை வலுப்படுத்தி கொள்ளவும், தென்சூடானுடனும், சர்வதேசத்துடனும் நல்லுறவுகளை கட்டியெழுப்புவதற்கான​ சாத்தியப்பாடுகள் குறித்தும் இச்சந்திப்பில் கலந்துரையாடப்பட்டன.
இவ்வாறு நா.த.அரசாங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாதம் ஊடகசேவை

No comments:

Post a Comment