போர் குற்றவாளிகள், இனப்படுகொலையாளர்கள், சித்திரவதையாளர்கள் ஆகியோரின் புகலிடமாக, சுவிஸ்இருக்க கூடாது என்பதனை சுவிசின் TRIAL அமைப்பு வலியுறுத்தியுள்ளது. சர்வதேச போர் குற்றவாளிகளை கையாள்வதற்குரிய, ஒர் பிரத்தியேக அலகு ஒன்றினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை TRIAL அமைப்பு கோரியுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற சட்டப்பிரிவை செயல்படுத்துவதற்குரிய விதிகள், சுவிஸ் சட்டத்தில் சனவரி 2011ம் ஆண்டிலேயே உள்ளடக்கபட்டிருந்த போதும், அது நடைமுறைரீதியான நிர்வாக அலகில் உள்ளடக்கபடாத நிலையிலேயே, சர்வதேச போர் குற்றவாளிகளை கையாள்வதற்குரிய ஒர் பிரத்தியேக அலகு ஒன்றினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை தாங்கள் கோரியுள்ளதாக TRIAL அமைப்பு தெரிவித்துள்ளது.
போர் குற்றவாளிகள், சித்திரவதையாளர்கள் பலர் சுவிஸ் மண்ணில் காலடி பதித்திருந்த போதும், அவர் மீது நடவடிக்கை எடுப்பதற்குரிய பிரத்தியேக அலகு இல்லாதிருப்பதனை சுட்டிக்காட்யுள்ள TRIAL அமைப்பு , சிறிலங்கா உட்பட யூகோஸ்லாவியா, ருவாண்டா, ஆப்கானிஸ்தான், சியரா லியோன் போன்ற நாடுகளைச் சேர்ந்த, சர்வதேச குற்றவாளிகள் பலர் சுவிசில் கால்பதித்து சென்றுள்ளமையயை சுட்டிக்காட்டியுள்ளது.
இந்நிலையிலேயே, சுவிஸ் மண்ணில் கால்பதிக்கும் போர் குற்றவாளிகள், இனப்படுகொலையாளர்கள், சித்திரவதையாளர்கள் மீது நடவடிக்கையெடுக்க, சட்டவலுவுள்ள ஒர் பிரத்தியேக அலகினை உருவாக்குமாறு, சுவிஸ் அரசாங்கத்தினை வலியுறுத்தி கையெழுத்து வேட்டையில் ஈடுபட்டதாக TRIAL அமைப்பு தெரிவித்துள்ளது.
சுவிசின் அமைப்பின் இச்செயற்பாட்டுக்கு சுவிஸ் உட்பட பல மனித உரிமை அமைப்புக்கள் ஆதரவினை வழங்கியுள்ளமை இங்கு குறிப்பிடதக்கது.
No comments:
Post a Comment