Translate

Friday, 17 February 2012

ஆயுதப் போராட்டம் பற்றி தமிழகத்தில் அமெரிக்கா ஆய்வு: கொழும்பு கடும் அதிருப்தி


இலங்கையில் இடம்பெற்ற ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பின்னணி குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் தமிழ் நாட்டில் நடத்திவரும் ஆய்வு தொடர்பில் இலங்கை அரசு கடும் விசனத்திற்கு உள்ளாகியிருப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

இலங்கையில் ஆயுதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட வரலாறு, அதன் பின்னணி, தமிழகத்திலுள்ள தமிழ் கட்சிகளின் தலைவர்களுக்கு இதிலுள்ள பிணைப்பு, இந்தியாவிலிருந்து அதற்கு கிடைத்த ஆதரவு எனபன குறித்து இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் விரிவான ஆய்வொன்றை செய்துவருகிறது. இதற்காக தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள், தமிழ்க் கட்சிகளின் தலைவர்களிடம் அமெரிக்க தூதரகம் விபரங்களை கோரியிருக்கிறது.
ஜெனிவாவில் மனிதஉரிமை தொடர்பான மாநாடு நெருங்கும் தறுவாயில் இந்தியாவிலுள்ள அமெரிக்க தூதரகம் இவ்வாறான ஆய்வை மேற்கொண்டிருப்பது குறித்து இலங்கை அரசு கடும் அதிர்ச்சிக்கும் விசனத்திற்கும் உள்ளாகியிருப்பதாக அரச தரப்பு தகவல்கள் நேற்று மாலை தெரிவித்தன.
இலங்கைப் பிரச்சினை தொடர்பான முக்கிய பல தகவல்களை இப்போதைக்கும் தமிழ்நாட்டிலுள்ள தமிழ் அமைப்புக்கள் அங்கிருக்கும் அமெரிக்கத் தூதரகத்திடம் அறிக்கையாக சமர்ப்பித்துள்ளன எனக் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment