Translate

Friday 27 January 2012

சீமானும், அமீரும் நீதிமன்றத்திற்கு நேரில் வந்தனர்


கடந்த 2008 ஆம் ஆண்டு ஈழத்தில் போர் நடைபெற்றுக் கொண்டிருந்த போது அதைக் கண்டித்து தமிழ்நாடு இயக்குநர்கள் சங்கம் மூலம் இராமேஸ்வரத்தில் மாபெரும் கண்டன பொதுக்கூட்டம் நடைபெற்றது.அதில் பேசிய இயக்குநர்கள் சீமான், அமீர் ஆகியோரின் பேச்சுகள் இந்திய இறையாண்மைக்கு எதிராக இருந்தது என வழக்குத் தொடுக்கப்பட்டு அவர்கள் இருவரும் சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
பின் அவர்கள் பிணையில் வந்தார்கள்.
அந்த வழக்கு கடந்த ஜனவரி 20 ஆம் தேதி அன்று இராமேஸ்வரம் நீதிமன்றம் முன் வந்த போது இயக்குநர் சீமான் வரவில்லை, இயக்குநர் அமீர் மட்டும் நேரில் வந்தார். அதனால் அன்று வழக்கு ஜனவரி 27 ஆம் தேதி ஒத்திவைக்கப்படுவதாகக் கூறப்பட்டது.
அதன்படி இன்று மீண்டும் அந்த வழக்கு இராமேஸ்வர நீதிமன்றத்திற்கு வந்தது. இன்று இயக்குநர்கள் சீமான் மற்றும் அமீர் ஆகிய இருவரும் நேரில் வந்து வழக்கைச் சந்தித்தனர்.
இன்று வழக்கு இராமநாதபுர நீதிமன்றத்திற்கு மாற்றப்படுவதால் அங்கு மாலை 4 மணிக்கு வர இருவருக்கும் ஆணையிடப்பட்டது.

No comments:

Post a Comment