சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம். அமைச்சர் டலஸ் அழகபெரும
சிங்கள மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துத் தமிழ்மொழிக்குத் துரோகம் இழைத்து விட்டோம்.
இவ்வரலாற்றுத் தவறை நிகழ்காலத்திலும் செய்யக்கூடாது என்று அமைச்சர் டலஸ் அழகபெரும கூறினார். இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன் அபிவிருத்தி அமைச்சில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,
இலங்கையில் ஏனைய சிறுபான்மை இன மொழிகளுக்கும் சம அந்தஸ்து வழங்கப்பட்டிருக்க வேண்டும். அதுமட்டுமன்றி சர்வதேச மொழிகளுக்கும் முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்க வேண்டும். அப்போதுதான் நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப உலகத்துடன் ஒன்றித்துப் பயணிக்க முடியும் என்றார்
No comments:
Post a Comment