Translate

Saturday, 18 February 2012

பொஸ்பரஸ் குண்டுகள் பாவிக்கப்பட்டதற்கான ஆதாரப் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது !

முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற இறுதியுத்ததின்போது பாஸ்பரஸ் என்னும் எரி குண்டுகளை இலங்கை அரசாங்கமானது பாவித்துள்ளமைக்கான ஆதாரங்கள் தற்போது வெளியாகியுள்ளது. 2009ம் ஆண்டு மே மாதம் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட இப் புகைப்படமானது இதனை துல்லியமாகக் காட்டுகிறது. இப் புகைப்படத்தை பகுப்பாய்வு செய்த வல்லுனர்கள் பொஸ்பரஸ் குண்டுகளின் தாக்கத்தால், படத்தில் காணப்படும் உடல் கருகியுள்ளதாகத் தெரிவித்துள்ளனர். இப் புகைப்படத்தில் காணப்படும் உடலமானது பெரிதும் எரியாமல், மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகள் எரியாமலும் காணப்படுகிறது. இருப்பினும் குண்டு பட்ட இடம் மட்டும் படு மோசமாக எரிந்தும், தசைகளை மற்றும் தோலை ஒரு பிளாஸ்டிக் போல உருக்கி எரியவைத்துள்ளது பதிவாகியுள்ளது.


பல உலக நாடுகளால் தடைசெய்யப்பட்ட பொஸ்பரஸ் குண்டுகளையும், கிளஸ்டர் குண்டுகளையும் இலங்கை பாவித்துள்ளது. முள்ளிவாய்க்கால் பகுதியில் சில இடங்களில் புலிகளின் அகோரத் தாக்குதலைச் சமாளிக்க முடியாத இராணுவத்தினர் அப் பகுதிகள் நோக்கி பாரிய கனரகத் தாக்குதலை நடத்தியதோடு, நச்சு வாயுத் தாக்குதல் மற்றும் பொஸ்பரஸ் குண்டுத்தாக்குதல் போன்றவற்றையும் நடத்தியுள்ளனர்.

தாமாகவே சில இடங்களை பாதுகாப்பு வலயம் என அறிவித்துவிட்டு, அவ்விடங்களில் மக்கள் செறிவாக இருந்தவேளை பல தாக்குதலையும் நடத்தியுள்ளனர். இவை அனைத்துமே இன அழிப்பு மற்றும் போற்குற்றங்கள் ஆகும். இதனை மூடி மறைக்கவே இலங்கை அரசானது இதுவரை எவரையும் முள்ளிவாய்க்கால் பகுதிக்கு அனுமதிப்பது இல்லை. இதேவேளை தடைசெய்யப்பட்ட குண்டுகள் பாவிக்கப்பட்ட இடங்களை இலங்கை அரசானது தற்போது துப்படவுசெய்து வருகிறது. மற்றும் எச்சங்களை அகற்றியும் வருவதாக அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment