Translate

Saturday, 18 February 2012

நன்மதிப்பை வென்றெடுக்க சுயாதீன விசாரணைகள் அவசியமானது –ICG


நன்மதிப்பை வென்றெடுக்க சுயாதீன விசாரணைகள் அவசியமானது –ICG
நன்மதிப்பை வென்றெடுக்க இலங்கையில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்படவேண்டியது மிகவும் அவசியமானது என சர்வதேச அனர்த்தக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

 
இலங்கை இராணுவம் தனது நற்பெயரை தக்க வைத்துக் கொள்ள வேண்டுமாயின்குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் சுயாதீன விசாரணைகள் நடத்தப்பட வேண்டுமென சர்வதேச அனர்த்தக்குழுவின் இலங்கைப் பணிப்பாளர் அலன்கீனன் தெரிவித்துள்ளார்.
 
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் இலங்கை தொடர்பில் சுயாதீனவிசாரணை நடத்தப்பட வேண்டுமென்ற அமெரிக்காவின் நிலைப்பாடு வரவேற்கத்தக்கது என அவர்சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமை மீறல் சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருவதாகக்குற்றம் சுமத்தியுள்ளார்.
 
சிலாபத்தில் மீனவர் படுகொலை செய்யப்பட்டமை, நீதிமன்றவளாகத்தில் கைதி கடத்தப்பட்டமை உள்ளிட்ட பல சம்பவங்களை உதாரணமாகக் காட்ட முடியும் எனஅவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
மனித உரிமைப் பேரவை அமர்வுகளில் இலங்கை விவகாரம் குறித்து பேசப்படவேண்டியது அவசியமானது என அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment