
கற்றறிந்த பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்குமாறு அமெரிக்கா இலங்கையிடம் அண்மையில் வலியுறுத்தியிருந்தது. இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்த அமெரிக்க இராஜதந்திரிகளான மரியா ஒட்ரேரோ மற்றும் ரொபேர்ட் ஓ பிளேக் ஆகியோர் அரச உயர்மட்டத்தினருடனான சந்திப்பின்போது இதனை வலியுறுத்தியிருந்தனர்.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள சட்டவிரோத ஆயுதக்குழுக்கள் தொடர்பில் அரசு உடனடி நடவடிக்கை எடுக்கவேண்டும்; அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதன்மூலம் அறிக்கை சிபாரிசுகளின் அமுலாக்கத்தை ஆரம்பிக்கலாம் என்ற சாரப்பட அமெரிக்கா வலியுறுத்தலை விடுத்திருப்பதாக அறியமுடிகின்றது.
எவ்வாறாயினும், அமெரிக்காவின் இந்த வலியுறுத்தலை அரச தரப்பு உடனடியாகப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளவில்லையெனப் பெயர் குறிப்பிட விரும்பாத அரசின் மூத்த அமைச்சர் ஒருவர் குறிப்பிட்டார். சட்டவிரோத ஆயுதக்குழுக்களுக்கு எதிராக சட்டச் செயற்பாடுகளை இப்போதைய சூழ்நிலையில் உடனடியாக மேற்கொள்ள இயலாதென்றும், அந்த விடயத்தில் தொடர்புடையவர்கள் அரசின் முக்கிய பொறுப்புகளை வகிப்பதால் அது குறித்து பின்னர் பரிசீலிக்க முடியுமெனவும் அரசு அமெரிக்காவிடம் தெரிவித்துவிட்டதென்றும் அந்த அமைச்சர் குறிப்பிட்டார்.
No comments:
Post a Comment