http://youtu.be/ozGGAI0OuLwபிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுவரும் நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் !
ஐ.நா மனித உரிமைச் சபை நோக்கிய, நீதிக்கும் சமாதானத்துக்குமான நடைப்பயணம் பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்று வருகின்றது.
ஈழத்தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு நியாயம் கேட்டுச் செல்லும் இந்த நடைப்பயணம் குறித்தான செய்தி, பிரென்சு ஊடகங்களின் கவனத்தைப் பெற்றுள்ளமை, விடுதலைச் செயற்பாட்டாளர்களுக்கு பெருத்த நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
சுயாதீன விசாரணைக்குரிய ஆண்டாக செயற்படுவோம், மக்கள் போராட்டங்களை வலுப்படுத்துவோம் எனும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முழக்கத்தை பறைசாற்றியவாறு, லண்டனில் இருந்து ஜெனீவா நோக்கிய இந்த நடைப்பயணம், 650கிலோ மீற்றர்களைக் கடந்து பிரான்சு தேசத்தில் உறுதியுடன் வீறுநடை போட்டுக் கொண்டுள்ளது.
தமிழர் மீதான சிறலங்கா அரசினது இனப்படுகொலை குறித்தான சுயாதீனா சர்வதேச விசாரணை , தமிழீத்தில மனித உரிமைகளைக் கண்காணிப்பகத்தை ஐ.நா நிறுவவேண்டும், தமிழீழத்தில் பொதுவாக்கெடுப்பொன்று நடத்தப்படவேண்டும் ஆகிய கோரிக்கைகளை இந்த நடைப்பயணம் வலியுறுத்துகின்றது.
கடந்த சனவரி 28ம் நாள் லண்டனில் இருந்து தொடங்கிய இந்த நடைப்பயணம், ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடர் தொடங்குகின்ற பெப் 27ம் நாளில் நா.த.அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நீதிக்காய் ஒன்றுபடுவோம் எனும் மக்கள் எழுச்சிப் போராட்ட நிகழ்வில் நிறைவு செய்யவுள்ளது.
No comments:
Post a Comment